பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

மகிழ்ச்சி எங்கே...?

சொற்பொழிவு ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஹாலில் இருந்தவர்கள் அமைதியாகப் பேசுபவர் உரையைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

Updated On :

அது ஒரு பெரிய ஹால்...

சொற்பொழிவு ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஹாலில் இருந்தவர்கள் அமைதியாகப் பேசுபவர் உரையைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

 அப்போது பேச்சாளர் தன் உதவியாளர்கள் மூலம் ஹாலில் இருந்தவர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் ஒரு பலூனை வழங்கினார். அதில் அவரவர் பெயரை எழுதவும் சொன்னார்.

 எழுதி முடித்ததும், அதை அடுத்திருந்த அறையில் போட்டுவிட்டு வரும்படி கூறினார். அனைவரும் அப்படியே செய்தனர்.

 இப்போது அவர், உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் தருகிறேன். உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறையிலிருந்து எடுத்து வாருங்கள் என்றார். உடனே அனைவரும், விழுந்தடித்துக்கொண்டு அறைக்கு ஓடினர். அவரவர் பெயர் கொண்ட பலூனைத் தேடினர். நெருக்கித் தள்ளி, விழுந்து தேடினர். அதற்குள் 5 நிமிடங்கள் முடிந்து விடவே, அனைவரும் மீண்டும் ஹாலுக்குத் தருவிக்கப்பட்டனர்.

 தங்கள் பெயருக்குரிய பலூன் யாரிடமும் இல்லை.... வேறு வேறு பெயர்கள் கொண்ட பலூன்களே இருந்தன.

 பேச்சாளர், மீண்டும் அவற்றை அறையில் போட்டுவிடும்படி கூறினார். அவ்வாறே செய்தனர். பிறகு, "மக்களே, மீண்டும் அறைக்குள்போய் ஆளுக்கு ஒரே ஒரு பலூனை மட்டுமே எடுத்து வாருங்கள். அதில் யாருடைய பெயர் உள்ளதோ, அந்த நபரிடம் கொடுத்து விடுங்கள்'' என்றார்.

 அடுத்த இரண்டே நிமிடங்களில் அவரவர் பெயர் எழுதப்பட்ட பலூன் அவரவர்க்கு கிடைத்துவிட்டது.

 இப்போது அவர் சொன்னார் ""இதுதான் வாழ்க்கை; எல்லோரும் மகிழ்ச்சியைத் தேடுகிறோம். ஆனால் அது, எங்கே, எப்படி எதில் கிடைக்கும் என்றெல்லாம் நினைப்பது இல்லை.

 சந்தோஷம் என்பது அடுத்தவர்களுக்கு உதவும்போது தான் கிடைக்கிறது. அடுத்தவர்களுக்கு நீங்கள் மகிழ்ச்சியைக் கொடுங்கள்.

 உங்களுக்கான, உங்களுடைய சந்தோஷம் உங்களைத் தேடி வரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.