கல்லணையைக் கட்டி இன்றளவும் கீர்த்தியுடன் மக்கள் மனதில் வாழும் மன்னன் கரிகால் சோழன்! அந்த அரசன் முன்பு அரண்மனைக் கொலு மண்டபத்தில் வழக்கு ஒன்று வந்தது.
நாங்கூரைச் சேர்ந்த சாத்தான் என்பவன் தனது நிலத்தையும் அதிலிருந்த கிணற்றையும் நூறு பொற்காசுகளுக்கு காத்தான் என்பவனிடம் விற்று விட்டான்.
காத்தான் கடுமையாக உழைத்து பயிரிட்டு நல்ல விளைச்சலைக் கண்டான். இதைப் பார்த்த சாத்தானுக்குப் பொறாமை ஏற்பட்டது!
எனவே அரசன் கரிகாலனிடம் சென்று, ""மன்னா! நான் நிலத்தையும், கிணற்றையும்தான் காத்தானுக்கு விற்றேன்! அதிலுள்ள தண்ணீரை அல்ல'' என்று வம்படி செய்தான்.
கரிகாலன் புருவத்தை உயர்த்தி எல்லோரும் அதிரும்படியான தீர்ப்பை வழங்கினான். ""சாத்தான்! நீ சொன்னபடி உன் தண்ணீர் காத்தான் நிலத்தில் உள்ளது. மிகவும் சரி...,இவ்வளவு நாள் உன் தண்ணீரை காத்தான் கிணற்றில் வைத்திருந்ததற்கு வாடகையாக ஒரு ஆண்டுக்கு பன்னிரண்டு மூட்டை நெல்லை, உன் கிணற்றையும், நிலத்தையும் வாங்கிய காத்தானுக்கு வழங்கத் தீர்ப்பளிக்கிறேன்'' என்றான் கரிகாற்சோழன்!
வசமாகச் சிக்கிக்கொண்ட சாத்தான், கரிகால் சோழன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். "இனி ஜென்மத்துக்கும் வம்படி வழக்கு செய்ய மாட்டேன்' என சாத்தானிடம் சத்தியம் வாங்கினான் மன்னன் கரிகாலன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்

நெட்பிளிக்ஸில் முதல் இடம் பிடித்த கான் சிட்டி திரைப்படம்!

அந்த ஒருவரால் நாடு சீரழிந்தது... பதிவைப் பகிர்ந்த நடிகை ஜோதிகா!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



