காட்டு ராஜா யார்?
ஒரு காட்டில் ஒரு குளவி நரியிடம், 'ஏன் இப்படி பயந்து ஓடி வருகிறாய்? என்ன நடந்தது?' என்று கேட்டது.


ஒரு காட்டில் ஒரு குளவி நரியிடம், ""ஏன் இப்படி பயந்து ஓடி வருகிறாய்? என்ன நடந்தது?'' என்று கேட்டது.
""உஷ், ராஜா வருகிறார். நம்மைப் பார்த்தால் கொன்று விடுவார்'' என்றது நரி.
""காட்டு ராஜாவா? யார் அவனை ராஜாவாக்கியது?'' என்று குளவி பேசியதைக் கேட்டு மற்ற விலங்குகளும் அங்கே கூடின.
அங்கு வந்த சிங்கம், ""இங்கே என்ன சத்தம்?'' என்று கேட்க, நரியோ தந்திரத்தால் ""ராஜா, இந்தக் குளவி உங்களைக் காட்டு ராஜாவாக ஏற்க முடியாது என்று கூறுகிறது'' என்றது.
சிங்கம் சீறியது. உடனே குளவி, ""நீங்கள் என்னுடன் சண்டையிட்டு வென்றால் நீங்கள் ராஜா என்று ஒத்துக்கொள்கிறோம்'' என்று சவால் விட்டது.
வேறு வழியின்றி சிங்கமும் சண்டைக்குச் சம்மதித்தது. குகைக்கு வெளியே சண்டை ஆரம்பமானது. சற்றும் எதிர்பாராத சமயத்தில் சிங்கத்தின் மூக்கின் மேல் "டொக்' என்று குளவி கொட்டியது. சிங்கத்தால் வலி தாங்க முடியவில்லை. தோற்று ஓடியது.
மற்ற விலங்குகள் பலத்த கரகோஷம் எழுப்பின. குளவியைப் பாராட்டினர். குளவிக்குத் தலைக்
கனம் வந்துவிட்டது. ""நானே ராஜா!'' என்று கூறி உயரப் பறந்துபோய் சிலந்தி வலையில் அகப்பட்டுக் கொண்டது.
சிங்கத்திற்கு உடலில் வலிமை என்றால், குளவிக்குக் கொட்டுவதிலும், சிலந்திக்கு ஒட்டுவதிலும் சக்தி உள்ளது. புகழால் தலைக்கனம் வந்ததால், அங்கிருந்த ஆபத்து அதற்குத் தெரியாமல் போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...