இளமையில் வெல்!!
சென்னை சேக்ரெட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி! பெயர் அக்ஷரா! ஒரு சாதனைச் சுட்டிப்பெண்! தந்தை ஆர்.வரதராஜன்.


சென்னை சேக்ரெட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி! பெயர் அக்ஷரா! ஒரு சாதனைச் சுட்டிப்பெண்! தந்தை ஆர்.வரதராஜன். ஹெச்.சி.எல் லில் பணிபுரிகிறார். தாய் கார்த்திகா! இனி அக்ஷரா வின் சாதனைகளைப் பார்ப்போம்!
அமெரிக்காவிலுள்ள அட்லாண்டாவில் 9வயது பிள்ளைகளுக்கான பிரிவில் "பிக்காஸேô ஓவியப் போட்டி' என்ற பெயரில் சிறு குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஒன்றை வைத்தது. சுமார் 150 நாடுகளிலிருந்து 850 குழந்தைகள் இதில் பங்கேற்றனர்! இதில் அக்ஷரா "நக்ஷத்திரக் கலைஞர் விருது' பெற்று இந்தியாவைச் சிறப்பித்திருக்கிறார்!
இது மட்டுமல்ல! "அகில உலக ஆந்தை மையம்' என்று அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டனில் இருக்கிறது. இந்த அமைப்பு ஆந்தையை வரைவதற்கு 6வயதிலிருந்து 10வயது வரை உள்ள குழந்தைகளை பங்கேற்கச் செய்தது! இருபத்தைந்து நாடுகளிலிருந்தும், இருபத்திரண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் குழந்தைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்! சுமார் 650 குழந்தைகள் இந்தப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதிலும் "அக்ஷரா' முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
இன்னொரு சாதனை! தமிழ்நாடு வனவிலங்குப் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஒரு ஓவியப் போட்டி நடைபெற்றது! இதிலும் "அக்ஷரா' வனத்துறை அமைச்சர் பச்சைமால் அவர்களிடமிருந்து கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்ற விழாவில் பரிசினைப் பெற்றார்!
மற்றுமொரு சாதனை! ரோசரி எம்.ஹெச்.எஸ்.எஸ். பள்ளி நடத்திய அனைத்துப் பள்ளிகளுக்கான வண்ணம் தீட்டுதல் போட்டியில் இரண்டாவது பரிசைத் தட்டிச் சென்றார் இந்தச் சுட்டிப் பெண்!
ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மட்டுமல்ல...! "காந்தி ஜெயந்தி ஹிந்தி கையெழுத்துப் போட்டி' என்ற பெயரில் ஒரு போட்டி ஹிந்தி பிரசார சபாவினால் நடத்தப்பட்டது. இதில் அக்ஷரா முதல் பரிசு மற்றும் பதக்கத்தைப் பெற்றார்.
இதே போன்று ஈரோடில் மற்றொருமுறை ஹிந்தி பிரசார சபா இந்தப் போட்டியை நடத்தியது. அதிலும் இவர் மூன்றாம் பரிசையும், பதக்கத்தையும் பெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்த்தாள்!
இன்னொரு சுவாரசியமான செய்தி! "க்ளோபல் அபாகஸ்' மற்றும் "தகவல் அறிவுச் சோதனை' நடத்திய, "ஸ்பெல் வேர்ட் 2014' என்றொரு போட்டியைக் குழந்தைகளுக்காக நடத்தியது. இதிலும் "அக்ஷரா' மூன்றாம் பரிசைத் தட்டிச் சென்றார்.
இன்னும் இருக்குதுங்க....!
படிப்பிலும் படுசுட்டி "அக்ஷரா!' "யுவஸ்ரீ கலாபாரதி விருது' என்று ஒரு விருது! இந்த விருது பல்முனைத் திறமை, மற்றும் படிப்புத் திறன், (அஇஅஈஉஙஐஇந, அகக தஞமசஈஉத) உள்ளோருக்காக வழங்கப் படுகிறது.
வழங்குவோர் "பாரதிய யுவ கேந்திரா'! ஸ்ரீசுவாமி சுப்ரமணியம் என்பவர் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீகோரக்நாத் ஆசிரமத்தில் இவ்விருதை "அக்ஷரா' விற்கு வழங்கினார்! (கை தட்டுங்க!)
"தகவல் அறிவுச் சோதனை'(க்ளோபல் அபாகஸ்) குழந்தைகளுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் முதல் பரிசை வென்றார் அக்ஷரா!
இன்னும் பல சுவாரசியமான விஷங்கள்!
நாட்டியத்திலும் மிக ஆர்வமாக இருக்கிறார் "அக்ஷரா!' இனிமையாகப் பாடவும் செய்கிறார்! அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்தும் "கிரேடு-1' போட்டியில் கலந்து கொள்ளப் போகிறார்!
விளையாட்டு? அட அதிலும்தாங்க...., நீச்சல் போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
" வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடி எதிர்நீச்சல்..., என்கிறாள் போலும்! ஹிந்தியில் பிரேவிசிகா பரீட்சை எழுதி முடித்து விட்டார்.
தன்னம்பிக்கை உள்ள இந்தக் குட்டிப் பெண்ணின் பெற்றோர்கள் பெருமிதப் புன்னகை புரிகின்றனர்!
மென் மேலும் அவர் ஈடுபடும் துறைகள் அனைத்திலும் சாதனைகள் புரிய நாம் அனைவரும் அக்ஷராவை வாழ்த்துவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...