கேள்வி: நம் நாட்டில் நாம் வெளியே போகும்போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம் என்கிறோம். மற்ற நாடுகளில் எப்படி?
பதில்: நம் நாட்டில்தான் பூனையையும் சகுனத்தையும் சம்பந்தப் படுத்தி இப்படி ஒரு சமுதாயப் பிரச்னை இருக்கின்றது.
அமெரிக்கர்களுக்கு பூனைதான் "நம்பர் ஒன்' செல்லப் பிராணி. அமெரிக்காவில் மட்டும் செல்லப் பிராணிகளாக 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பூனைகள் வளர்க்கப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.
ஃபேஷன் ஷோ, நாய் கண்காட்சி போன்று பூனைக் கண்காட்சிகள் அங்கு அடிக்கடி நடக்கின்றன. துறு துறுப்பாகவும் அழகாகவும் இருக்கும் பூனைகளுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பில் பரிசுகள் வழங்கப் படுகின்றன.
எகிப்து நாட்டில், பூனைகள் கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் விலங்குகள் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனால் பூனைகள் அங்கு புனிதமானவைகளாக மதிக்கப்படுகின்றன. எகிப்து நாட்டில், பூனை வழிபாடு நான்காயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் இருந்து வருகிறது.
ஐரோப்பியர்களுக்கும் பூனைகளைப் பிடிக்கும். ஆனால் கறுப்புப் பூனை என்றால் மட்டும் அவர்களுக்கு அலர்ஜி! சில குறிப்பிட்ட நேரங்களில் சாத்தான், கறுப்புப் பூனையாக மாறுகிறது என்பது அவர்களது நம்பிக்கை!
அடுத்த வாரக் கேள்வி: மீன்களில் மனிதர்களுக்கு மிகவும் தேவையான புரதச் சத்து மிக அதிகமாக உள்ளது என்கிறார்களே, உண்மையா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


