கதைப் பாடல்: இரக்கமுள்ள இதயம்!
கீரைப் பாட்டி வாசலில் நின்றாள்""கீரை...கீரை'' என்றை அழைத்தாள்!


கீரைப் பாட்டி வாசலில் நின்றாள்
""கீரை...கீரை'' என்றை அழைத்தாள்!
முருங்கைக் கீரை...அரைக்கீரை...
முளைக்கீரை...அகத்திக் கீரை!
பசலைக்கீரை...பொன்னாங்கண்ணி
பாலைக்கீரை...சிறுகீரை...என
பலரும் வாங்கிடும் நற்கீரை!
பலபல கீரை இளம் பச்சை!
மரகதம் வந்தாள் மாடியிலிருந்து...
மாலா அவள் மகள் பின்னே வந்தாள்!
""பெரிய கட்டாக இரண்டு கட்டு -அரைக்
கீரைக் கட்டைத் தருவாய்...கிழவி!''
என்றாள் தாயும்....மாலா நெஞ்சம்
"இனிதாய்ப்..."பாட்டி'...என்றால் என்ன...
...கனிகள் இருக்க...காய் வேண்டாமே...''
என்றே நினைத்தது...இரக்கம் கொண்டது!
""கட்டின் விலையோ பத்து ரூபாய்...
காட்டுப்பாக்கம் சந்தை விலை இது!
வெய்யிலில் நடந்தேன் கூடையைத் தூக்கி...
வேண்டியது கூட இரண்டே ரூபாய்!''
பாட்டியின் காலை மாலா பார்த்தாள்
பாதத்துக்குச் செருப்பும் இல்லை!
வருத்தத்துடனே தாய் முகம் பார்த்தாள்!
""வழக்கமாகத் தருவது பத்து...
என்ன வந்தது இன்று மட்டும்....
இரண்டு ரூபாய் அதிகம் அதிகம்...
இருபது ரூபாய் தருவேன்...பெறுவாய்!
இந்தக் கீரைக்கு இதுவே போதும்!''
கட்டுடன் அம்மா உள்ளே வந்தாள்
கலங்கிப் போனது மாலா உள்ளம்!
""அம்மா என்னைப் பொறுத்திட வேண்டும்...
...அமைதியாகக் கேட்டிட வேண்டும்...
...நேற்று மாலை நகைக் கடை சென்றோம்...
நேர்த்தியான நகை பல பார்த்தோம்!
ஆயிரக் கணக்கில் அள்ளிக் கொடுத்தோம்-விலையில்
அங்கே எதுவும் குறைத்திடவில்லை!....
....இந்தப் பாட்டிக்கு என்ன கிடைக்கும்?
இதிலே எதற்கு இந்தப் பேரம்?''
அந்தச் சொற்கள் அவளை எழுப்பின!
அவற்றின் இருந்த நீதியை உணர்ந்தாள்!
எவ்வளவு பெற்றும் மனநிறைவில்லை
இல்லாதோர் நிலை நினைப்பதுமில்லை
என்றவள் பத்தைச் சேர்த்துக் கொடுத்தாள்
இதயம் மகிழ்ந்து மாலா அளித்தாள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...