மகிழ்ச்சி!
அது அழகு அமைந்த பூங்கா! மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டது. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடுத்தர வயதினர், ஒத்த வயதுடைய


அது அழகு அமைந்த பூங்கா! மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டது. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடுத்தர வயதினர், ஒத்த வயதுடைய நண்பர்களுடன் உரையாடும் ஓய்வு பெற்ற அலுவலர்கள், சிறுவர் சிறுமியர், என்று பூங்காவில் அந்திப் பொழுதுகளில் கூட்டம் நிரம்பி வழியும். கலகலப்பு பூங்கா முழுவதும் பூத்துக் குலுங்கும். அழகிய மலர்களும் செடிகளும், நூதனமான கொடி வகைகளும், நெடிது உயர்ந்த மரங்களும், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் தரும் ஒரு இடம் அது!
அன்று என்ன காரணத்தாலோ பூங்காவில் கூட்டம் இல்லை. ஒரு பெரியவர் மட்டும் அங்கு இருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். அப்போது மேரி என்ற பத்து வயது சிறுமி பந்து விளையாட பூங்காவிற்கு வந்தாள். அவள் வயதையொத்த சிறுமிகள் யாரையும் பூங்காவில் காணோம். அதனால் பெஞ்சில் இருந்த பெரியவரை பந்து விளையாடக் கூப்பிட்டாள். அவரும் அவளின் அழைப்பை ஏற்று விளையாடச் சம்மதித்தார். இருவரும் உற்சாகமாய் பந்து விளையாடினார்கள். நேரங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் பெரியவர் சோர்ந்து போனார். எனவே விளையாட்டை நிறுத்திக் கொள்வோம் என்று அவர் கேட்டுக்கொள்ள மேரியும் ஏற்றுக் கொண்டாள். அதன் பிறகு மேரியிடம் ""நான் யார் என்று உனக்குத் தெரியுமா...?'' என்று கேட்டார்.
தெரியாது என்று உதட்டைப் பிதுக்கினாள் மேரி.
அந்தப் பெரியவர்தான் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்!
மேரியிடம் விடை பெறும்போது அவர், ""உனது அம்மா, அப்பாவிடம் நான் எழுத்தாளர் டால்ஸ்டாயுடன் பந்து விளையாடினேன் என்று சொல்லு...,அவர்கள் ரொம்பவும் சந்தோஷப் படுவார்கள்'' என்றார்.
கொஞ்சமும் தாமதிக்காமல் அந்தச் சிறுமி, ""உங்களது அப்பா, அம்மாவிடமும் சொல்லுங்கள்...,மேரியுடன் பந்து விளையாடினேன் என்று...,அவர்களும் மிகமிக மகிழ்ச்சி அடைவார்கள்'' என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்தாள் மேரி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...