மாவீரன் அலெக்சாண்டர் ஓர் இந்தியத் துறவியைச் சந்தித்தார். துறவியின் கண்களில் அருள் ஒளிப் பிரகாசம்! பணிவுடன் அவரை வணங்கினான் அலெக்சாண்டர்! அவரது சாந்தமான முகத்தால் வசீகரிக்கப்பட்ட அவன், ""என்னுடன் கீரீஸ் நாட்டுக்கு வந்து விடுங்களேன்..., உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் நான் செய்து தருகிறேன். என் நாட்டு மக்களும் தங்களை மிகவும் நேசிப்பார்கள்'' என்று அவரை அழைத்தான்.
""வேண்டாமப்பா...! என் நாட்டிலேயே நான் நிம்மதியாக, மனநிறைவுடன்தானே வாழ்கிறேன்'' என்றார் துறவி.
இந்தப் பதில் அலெக்சாண்டருக்கு கோபமூட்டியது. ""நான் யார் தெரியுமா...? சக்ரவர்த்தி!'' என்றான்.
""மிகவும் மகிழ்ச்சி!..., எனினும் நான் உன்னுடன் வர இயலாது...''என்றார் துறவி.
இந்த பதில் அலெக்சாண்டரை மேலும் ஆத்திரமடையச் செய்தது. அவன் வாளை உருவியபடி, ""இதுவரை யாரும் எனக்குப் பணிய மறுத்ததில்லை...! எனக்குப் பணிய மறுத்தவர்களுக்கு என்ன கதி நேரும் தெரியுமா?''
துறவி சிரித்துக்கொண்டே, ""என்ன...? என்னைக் கொன்று விடுவாயா? அப்படியே கொன்று விட்டாலும் நீ என் உடலைத்தானே கொல்ல முடியும்? அது வெறும் சட்டையைப் போன்றது. நான் உடல் அல்ல. அதனுள் வசிக்கும் ஆன்மா.''என்றார்.
""இருக்கட்டும்..., நான் சக்ரவர்த்தி!'' என்றான் அலெக்சாண்டர்!
""ஹும்ம்....,சக்ரவர்த்தியா...? நீ என் அடிமைக்கு அடிமை!''
இந்த பதிலால் அசந்து போனான் அலெக்சாண்டர்! ""எப்படி?...,எப்படி? நீங்கள் உங்கள் அடிமைக்கும் அடிமை என்று கூறலாம்?'' என்றான் கோபத்துடன்!
துறவி புன்னகையுடன், ""நான் கோபத்தை அடக்கிவிட்டேன்! இப்போது கோபம் என் அடிமை. என் அடிமையாகிய கோபத்திற்கு நீ அடிமையாகிவிட்டாயே....,அப்படியானால் நீ என் அடிமையின் அடிமைதானே?''
துறவியின் வார்த்தைகள் அலெக்சாண்டருக்கு உண்மையை உணர்த்திவிட்டது!
""என்னை மன்னித்துவிடுங்கள்'' என்றான் அவரை வணங்கியபடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


