கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கதைப்பாடல்: ஊரையே விழுங்கும் பூதம்!

பரந்து விரிந்த பூதம் பரதவரை சுமக்கும் பூதம்

News image
Updated On :27 பிப்ரவரி 2016, 11:15 am

பரந்து விரிந்த பூதம்

பரதவரை சுமக்கும் பூதம்

உயிர் கோடி தந்த பூதம்

உரையே விழுங்கும் பூதம்! - எந்த பூதம்?

காடெல்லாம் ஊரும் பாம்பு

காட்டாற்றைக் கடக்கும் பாம்பு

ஊ..ஊ...என்று சீரும் பாம்பு

ஊரோரம் ஒதுங்கும் பாம்பு! - என்ன பாம்பு?

ஆலயத்தில் நிற்கும் யானை

அசையா திருக்கும் யானை

ஊர் கூடி இழுக்கும் யானை

வீதியுலா போகும் யானை! - எந்த யானை?

ஒற்றை மலர் பூக்கும் மரம்

ஒதுங்க நிழல் தாரா மரம்

உச்சி வேரைக் கொண்ட மரம்

ஊரெல்லாம் ஒளிரும் மரம்! - என்ன மரம்?

காயத்தில் மலரும் பூவாம்

கண்ணுக்குத் தெரியாப் பூவாம்

உன் என்னில் உள்ள பூவாம்

ஓர் நாளில் உதிரும் பூவாம்! - என்ன பூவாம்?

கருங்கடல்,...ரயிலு வண்டி...,

பெருந்தேரு...,மின்கம்பம்...,

உருவமில்லா உயிர்...,ஐந்தும்!

விடுகதைக்கு விடை இதுவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.