விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

காரணம் யார்?

நீண்ட காலத்திற்குப் பிறகு தன் பள்ளி ஆசிரியரை தற்செயலாகச் சந்தித்தான் ஒருவன். ஆசிரியருக்கும் தன் பழைய மாணவனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்தார்கள்.

News image
Updated On :20 ஜூன் 2016, 8:34 am IST

நீண்ட காலத்திற்குப் பிறகு தன் பள்ளி ஆசிரியரை தற்செயலாகச் சந்தித்தான் ஒருவன். ஆசிரியருக்கும் தன் பழைய மாணவனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்தார்கள்.

 பழைய மாணவன் ஆசிரியரிடம், ""உங்களிடம் படித்த மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான முன்னேற்றம் அடைவதில்லையே....., சிலர் தாழ்ந்தும், சிலர் உயர்ந்தும் இருக்கிறார்களே அது ஏன்?'' என்று

கேட்டான்.

 ""ஆசிரியர்களுக்கு எரிச்சலூட்டும், ஏமாற்றமூட்டும் கேள்விதான் இது! என்றாலும் நான் இதற்காக வருத்தமோ கோபமோ அடையவில்லை. ஓர் உதாரணம் சொல்கிறேன் கேள்''

 ""சொல்லுங்கள் ஐயா''

 ""தூண்டில் போட்டு மீன் பிடிக்கக் கற்றுக் கொள்கிறார்கள் இருவர். ஒருவன் ஆறு, குளம், ஏரிகளில் தூண்டில் போட்டு ஏராளமான மீன்களைப் பிடித்து சந்தோஷமாக வாழ்கிறான். மற்றவன் செயற்கையான நீச்சல் குளத்தில் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்திருக்கிறான். மீன்கள் சிக்கவில்லை என்று அழுகிறான். கற்ற கல்விக்குச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்திக்கொள்பவன் சிறப்படைகிறான்...,தவறான இடத்தைத் தேர்ந்தெடுப்பவன் சிறுமையடைகிறான்..இவ்வளவே!''

 புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையாட்டினான் அந்தப் பழைய மாணவன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.