மரியாதை
ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர்க்கு சற்று கர்வம் அதிகம். ஊர்க்காரர்களுடன் சகஜமாகப் பழகமாட்டார். நிறைய வசதிகள்,


ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர்க்கு சற்று கர்வம் அதிகம். ஊர்க்காரர்களுடன் சகஜமாகப் பழகமாட்டார். நிறைய வசதிகள், வேலையாட்கள், நிலபுலன்கள் இருந்தாலும் யார் வீட்டுக்கும் நல்லது கெட்டது எது நடந்தாலும் போக மாட்டார்.
ஊரில் பெரிய செல்வந்தராயிருப்பதால் ஊர்க்காரர்கள் தங்கள் வீட்டு நல்லது, கெட்டதற்கு அவருக்கு அழைப்பு விடுப்பர். ஆனால் அவர் தனக்கு பதில் அவருடைய கைத்தடியை ஓர் ஆள் மூலம் கொடுத்தனுப்பி அந்த வீட்டில் வைப்பார். அவர் வந்ததாக நினைத்துக்கொண்டு மற்ற காரியங்களை அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் செய்வார்கள்.
இப்படியே பல காலம் கடந்தது. அக் கிராம மக்கள் அவரை எதிர்த்துப் பேச முடியாமலும், அதேசமயத்தில் அவரது தலைக்கனத்தை அகற்றவும், அவருக்கு நல்ல புத்தி புகட்டவும், தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
திடீரென செல்வந்தருக்கு உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகிவிட்டார். கிராமத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவருடைய பணியாட்கள்கூட அவர்மீது அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்கள்.
ஒருநாள் அவர் இறந்துவிடவே அவர் வீட்டில் சங்கு ஊதியும், தாரை தம்பட்டை அடித்தும் எல்லோருக்கும் சொல்லியும் அனுப்பினார்கள்.
கிராம மக்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு கைத்தடியைத் தயார் செய்து ஓர் ஆள் மூலம் அனுப்பி அவர் வீட்டு வாசலில் வைத்து வரச் சொன்னார்கள். மேலும் கைத்தடிகளை, கிராமத்து ஆட்களாக நினைத்துக் கொள்ளும்படியும் கூறி அனுப்பினார்கள்.
செல்வந்தருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது! தனது செயலுக்குத் தகுந்த தண்டனையாக அதைக் கருதினார்.
நாம் எதைச் செய்கிறோமோ அதையே மற்றவர்களும் நமக்குச் செய்வார்கள்.எனவே எவ்வளவு பணமிருந்தாலும், செல்வாக்கு இருந்தாலும் மற்றவர்களை மதிக்காவிட்டால் மற்றவர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தார் அவர்!
சிறிது நாட்களில் அவருக்கு உடல் நிலை தேறியது.
உடனே கிராம மக்களுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி அதனை ஒரு ஆள் மூலம் கிராமத் தலைவருக்கு அனுப்பினார் அவர்! திருந்திய அந்த செல்வந்தர் இப்போது அனைவருடன் சகஜமாகப் பழகிக் கொண்டும், அனைவரிடமும் தனது அன்பைப் பரிமாறிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...