ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முத்துக் கதை: புத்தரும் ஓர் ஏழையும்

புத்தர் ஓரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஓர் ஏழை அவர் முன் வந்து நின்றான். அந்த ஏழை மனிதன் புத்தரிடம், ""ஐயா! நான் மிகவும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:45 pm

தங்க. சங்கரபாண்டியன்

புத்தர் ஓரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஓர் ஏழை அவர் முன் வந்து நின்றான். அந்த ஏழை மனிதன் புத்தரிடம், ""ஐயா! நான் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறேன்...''என்று கூறினான்.

 அதற்கு புத்தர் புன் முறுவலுடன், ""உன்னிடமும் சில பொருட்கள் உள்ளன. அவைகளை நீ மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்....அப்போது நீ உன் ஏழ்மை நிலையிலிருந்து விடுபடுவாய்'' என்றார்.

""என்னிடமா...? என்னிடம் என்ன இருக்கிறது?''

""ஆம்...உண்மைதான்...,உன்னிடம் உள்ள மிக முக்கியமான பொருட்களைப் பற்றி நீ அறிந்து கொள்ளவில்லை...''

""ஐயா! அவைகள் என்ன...,எனக்கு ஒன்றும் புரியவில்லை''

""அதுவா? உன் முகம் அடுத்தவர்களுக்குப் புன் சிரிப்பைக் கொடுக்கும்! உன் வாயினால் மற்றவர்களின் திறமைகளைப் பாராட்டலாம். துயருற்றோருக்கு ஆறுதல் மொழி கூறலாம். உன் மனதையும், செவியையும், மற்றவர்களுக்குத் திறந்து வைக்கலாம். உனது கண்களால் நற்செயல்கள், நல்ல காட்சிகள் அனைத்தையும் காணலாம். கண்களில் அடுத்தவர்க்குக் கருணை காட்டலாம். மற்றவர்களுக்கு உதவ உனது கரங்கள் பயன்படுமே! கடவுள் நமக்கு எவ்வளவு பொக்கிஷங்களைத் தந்திருக்கிறார் பார்! நீ ஏழையே இல்லை.''

""ஆம் ஐயா...,நான் உணர்ந்து கொண்டேன். மிகவும் சரி, நான் ஏழையே இல்லை.''

""சரி. அருகிலுள்ள ஆசிரமத்தில் சிறிது உணவு அருந்திவிட்டுப் போ. மற்றவர்க்கு உதவி செய்யும் எண்ணம் இல்லாதவர்கள்தான் மிகவும் ஏழை! நீ அல்ல!''

 அந்த வறியவனுக்குப் பசியும் நீங்கியது. மற்றும் மனதில் புதியதோர் உற்சாகமும் பிறந்தது! உழைப்பினாலும், மற்றவர்களிடம் வாங்கிய நற்பெயராலும், அந்த ஏழை, பெரும் செல்வந்தன் ஆனான். அந்த ஊரில் இன்றும் அந்த பரோபகாரியைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.