

ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் இருவருமே வெட்டிப்பேச்சு பேச விரும்ப மாட்டார்கள். பொதுக்கூட்டங்களில் பேசுவதையும் அவர்கள் வெறுத்தார்கள். ஒருமுறை ரைட் சகோதரர்களுக்கு ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்து, அதை முதன்முதலில் ஓட்டி சாதனை புரிந்ததற்காக, அறிவியல் அறிஞர்கள் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் தலைமை வகித்தவர், ரைட் சகோதரர்களில் மூத்தவரான வில்பர் ரைட்டை அழைத்து, தங்கள் சாதனை குறித்து விளக்கிப் பேசுமாறு கேட்டுக் கொண்டார். வில்பர் ரைட் எழுந்து, ""எனக்குப் பேசத் தெரியாது. நன்றாகச் சொற்பொழிவாற்றுவதில் வல்லமை படைத்தவன் என் தம்பி ஆர்வில் ரைட்தான்'' என்று கூறி அமர்ந்துவிட்டார். ஆர்வில் ரைட்டைப் பேச அழைத்தார் தலைவர். ஆர்வில் ரைட் எழுந்து, ""என் தமையனார் வில்பர் ரைட் அற்புதமாகப் பேசிவிட்ட பிறகு நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?'' என்று கூறிவிட்டு உட்கார்ந்து விட்டார்.
ஆதாரம்: ""சிரிக்க - சிந்திக்க - மேதைகளின் நகைச்சுவை'' என்ற நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.