தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பொன்மொழிகள்!

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. 

News image
Updated On :11 நவம்பர் 2017, 4:35 am

சஜி பிரபு மாறச்சன்

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. 
- அரிஸ்டாட்டில்

சிந்திக்காமல் படிப்பது வீண். படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது. 
-கன்ஃபூஷியஸ்

வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவை அறிந்து வரவைச் சேர்ப்பது நற்குணம். 
- கவிதாசன்

நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும்போதே காண்கிற கனவு.
- பிளினி 

மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்திற்குப் போ! 
- மாசேதுங்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச் செய்து பார்த்ததில்லை என்று பொருள்! 
- ஐன்ஸ்டின்

நேற்று அசாத்தியமாய் இருந்தது இன்று சாத்தியமாகும் அற்புதத்தை, ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். 
- விவேகானந்தர்

சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல!....., அது வேலையைவிட அதிகக் களைப்பைத் தரும்! 
- புல்லர்

நான் இன்னும் வாசிக்காத ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன். 
- ஆபிரஹாம் லிங்கன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.