

காட்டில் இருந்த விலங்கெல்லாம்
ஆடின....பாடின....கொண்டாட்டம்!
சிங்க ராஜா அழைக்கின்றார்
சிரிப்புக் கென்று ஒரு கூட்டம்!
ஆலமரத்தின் அடர் நிழலில்
அமர்ந்தன....நின்றன அவையெல்லாம்!
சிங்கம் சொன்னார் செய்தியினை!
""சிரிப்பு வெடிகள் வெடிப்போர்க்கு...
...சிரிப்புப் பரிசு தந்திடுவேன்...
சிரிக்காது ஒருவர் இருந்தாலும் -சிரிப்பை
சொன்னவர்க்குப் பரிசில்லை-அவர்
உடம்பிலும் கிடைக்கும் இரண்டு அடி!''
குரங்கு குதித்தது மேலிருந்து....
சிரிப்பைச் சொன்னது சேட்டையுடன்!
குலுங்கிக் குலுங்கி விலங்கெல்லாம்
கோமாளி யாகிக் களைத்தனவே!
ஆனால் ஆமை சிரிக்கவில்லை....
அதனால் குரங்குக்கு இரண்டு அடி!
மானும் வந்தது மகிழ்ச்சியுடன்
ஆமையை நினைத்ததும் அச்சம்தான்!
வெடித்தது நல்ல சிரிப்பு வெடி
விலங்குக் கெல்லாம் வயிற்று வலி!
எனினும் ஆமை சிரிக்கவில்லை - அடியால்
எள்ளும் கொள்ளும் மான் முகத்தில்!
ஒட்டைச் சிவிங்கிக்கு அழைப்பு வர
உடனே வந்தது உள்ளத்தில்
ஆமையை நினைத்ததும் சிரிப்பு மறந்தது! - ஆனால்
ஆமை சிரித்தது குலுங்கிக் குலுங்கி!
சிரிப்பே இன்னும் சொல்லாத போது - நீ
சிரித்தது எதற்கு? கேட்டார் சிங்கம்...
""அப்போது குரங்கு சொன்ன சிரிப்பு
இப்போதுதானே புரிந்தது எனக்கு!...''
""ஆகா!...இதனை அடித்துக் கொள்ள
அடுத்த சிரிப்பு இங்கே இல்லை!...''
என்றன எல்லாம்! ஒட்டைச் சிவிங்கி
அடி வாங்காமல் சொன்னது, ""நன்றி!''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

