தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புத்தகங்கள் படி!

பள்ளிக்கூடப் புத்தகங்கள் பரந்த அறிவை வளர்த்தாலும் 

News image
Updated On :21 ஏப்ரல் 2018, 8:39 am

கே.பி.பத்மநாபன்

பள்ளிக்கூடப் புத்தகங்கள் 
பரந்த அறிவை வளர்த்தாலும் 
தெள்ளத் தெளிந்த அறிவுயரத் 
தேடிக் கற்பாய் பலநூல்கள்!

அள்ள அள்ளக் குறையாத 
ஆனந்தம் தான் இலக்கியங்கள்!
உள்ளம் தூய்மை அடைந்திடவே 
உலகில் உண்டே அறநூல்கள்!

சிறிய குறளின் நூல்கற்றால் 
சிறந்த மனிதன் ஆகிடலாம்!
நெறியாய் உலகில் வாழ்ந்திடவே 
நீதி நூல்கள் கற்றறிவாய்!

அறிஞர் தம்மின் வரலாறு 
அனைவருக்கும் வழிகாட்டும்!
பிறிது மொழியில் இருந்தாலும் 
பெருமை உணர்ந்து படித்திடுவாய்!

புத்தகம்தான் உயிர் நண்பன்!
போற்றி உரைத்தார் பெரியோர்கள்!
புத்தகங்கள் திறந்திட்டால் 
பூட்டப்படுமே சிறைச்சாலை!

புத்தகத்தை விரும்பாதோர்
புவியில் விலங்கைப் போலாவார்!
புத்தகங்கள் பலகோடி!
புரிந்து கற்றால் புகழ்கோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.