

மித்ராவுக்கு மணியைப் பிடிக்கவில்லை!
""அம்மா!....என் ஃபிரண்ட் ஷாமிலி வீட்டிலிருக்கிற நாய் ஜூலி எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கு தெரியுமா?....நம்ம மணி மாதிரி எப்பவும் தூங்கிக்கிட்டே இருக்காது!...''
அவளது அம்மா மணி மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார். அதனால் ""மித்ரா!...அப்படிச் சொல்லாதே....பாவம்! அதுக்கு உன்னைவிட ரெண்டு வயசு அதிகம்!....வயசாயிடுச்சுன்னா நாமும் இப்படித்தான் இருப்போம்...'' என்றாள்
உறங்கிக் கொண்டிருந்த மணி கண்களைத் திறந்து ஒருமுறை இவர்களைப் பார்த்துவிட்டு கண்ணயர்ந்தது.
மணிதான் மித்ராவின் குழந்தைப் பருவத் தோழன். அவள் இருக்கும் இடத்திற்கெல்லாம் ஒரு பாதுகாவனைப் போல் சென்று படுத்துக் கொள்ளும். முற்றத்துத் தோட்டத்தில் விளையாடும். அவளைக் கிணற்றடிப் பக்கம் செல்லவே விடாது. அவள் எப்போது அழத்தொடங்கினாலும் வீட்டிலிருப்பவர்களை அழைத்து வரும்!....மித்ரா மற்ற சிறுவர் சிறுமியர்களுடன் விளையாடத் தொடங்கியதிலிருந்து அவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டது மணிதான். அவளுடைய கட்டளைகளுக்கெல்லாம் அடி பணியும். மணியை இப்போதும் மித்ராவினுடைய அண்ணன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்!
ஆனால் வயோதிகம் காரணமாக மணி உடலளவில் தளர்ந்து போனது. காலப்போக்கில் மாறிவிட்ட மித்ராவுக்கு அது எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பதை ப் பார்க்கக் கோபமாக வந்தது!
ஒரு நாள் காலை, மணி வாசலில் தண்ணீரைத் தேடியபோது மித்ரா தன் அம்மாவிடம், ""அம்மா!....மணி நமக்கு வேண்டாம்மா....எங்கேயாவது கொண்டுபோய் விட்டுட்டுப் புதுசா ஒரு பொமரேனியன் வகை நாய்க்குட்டியை வாங்கிக்கலாம்!...க்யூட்டாக இருக்கும்! துறுதுறுன்னு இருக்கும்!....''
இதை மணி கேட்டுவிட்டது!....அவ்வளவுதான்!....
அன்று மாலை வரை மணி வீட்டிற்கு வரவில்லை....மதியம் தட்டில் வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருந்தது. மித்ராவின் தாயும், தந்தையும் பதறிப்போய்த் தேடத் தொடங்கினார்கள்......மணி வழக்கமாகச் செல்லும் இடங்களில் தேடியும் பயனில்லாமல் போனது. மித்ராவின் அம்மாவின் கண்களில் கண்ணீர்! அழத்தொடங்கினாள். மித்ராவுக்கும் ரொம்ப வருத்தமாக இருந்தது.
ஒரு வழியாக இரவு நேரத்தில் அதை எப்படியோ கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார் அப்பா!
காலையில் நடந்தது பற்றிக் கேட்டறிந்த அப்பா, ""மித்ரா, ஒருத்தருக்கு வயசான காலத்தில்தான் அன்பும், அக்கறையும் அதிகமா தேவைப்படுது.....அதை அவர்களுக்குக் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்!.....மணிக்கும் இது பொருந்தும்! அதுக்கு நாம பேசுவது எல்லாமே புரியும்! திருப்பித்தான் பேச முடியாது!....இத்தனை நாள் நமக்குச் சேவை செஞ்ச மணியை நாம நல்லபடியா பார்த்துக்கறதுதானே நியாயம்?....'' என்றார்.
மனம் திருந்தியவளாக ஒடிச் சென்று மணியை அணைத்துக் கொண்டாள் மித்ரா!.....அன்றிலிருந்து மணியை அக்கறையுடன் கவனித்து வருகிறாள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மனித உரிமை மீறல்! 19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
2026 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது!

மதிமுகவுக்கு 4 தொகுதிகள்!

எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

