சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொன்மொழிகள்!

ஒருவருக்கொருவர் நல்ல பண்புகளுடன் நடந்து கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான தேவையாகும்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2018, 4:30 am

அ. ராஜா ரகுமான்

ஒருவருக்கொருவர் நல்ல பண்புகளுடன் நடந்து கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான தேவையாகும். 
- நபிகள் நாயகம்

எதையும் செய்யாதிருப்பதைக் காட்டிலும், ஏதாவது ஒரு நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்! 
- வில்லியம்  ஜேம்ஸ்

எப்போதும் நம்பிக்கையுடனும் முகமலர்ச்சியுடனும் இருப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் 
- சார்லஸ் கிங்ஸ்லி

தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது. 
- எமர்சன்

உன்னைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும், அதை எவரும் நம்ப மாட்டார்கள் என்கிற முறையில் வாழ வேண்டும். 
- பிளாட்டோ

வெற்றி மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்! ஆனால் தோல்விகளோ, நல்ல படிப்பினையையும், அனுபவத்தையும் கொடுக்கிறது. 
- கார்ல் மெனின்கர்

பழக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது! எனவே எப்போதும் நல்ல செயல்களையே செய்ய நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- வெலிங்டன்

உண்மையான அறிவு அடக்கமுள்ள மனிதனாக மாற்றும்! உண்மையான தியாக மனப்பான்மை வலிமை மிக்க மனிதனாக உயர்த்தும்! 
- ருட்யார்டு கிப்ஸிங்

சிறந்தவை எல்லாம் நல்லவை என்று கூறமுடியாது. ஆனால் நல்லவை எல்லாம் சிறந்தவையே! 
- டெமாஸ்தனிஸ்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.