முத்துக் கதை: உபத்திரவம்!

ஆமை ஒன்று ஆற்றைக் கடககும் நேரத்தில் தேள் ஒன்று ஓடி வந்தது. 
முத்துக் கதை: உபத்திரவம்!


ஆமை ஒன்று ஆற்றைக் கடககும் நேரத்தில் தேள் ஒன்று ஓடி வந்தது. 

""நான் அவசரமாக அக்கரைக்குப் போகணும். கொஞ்சம் உதவுங்கள்..."" என்று கெஞ்சிக் கேட்டு கொண்டது தேள். 

ஆனந்தமாய் ஆமையில்  முதுகில் ஏறிக்கொண்ட தேளுக்கு ஒரு சந்தேகம்....." பாறை மாதிரி இருக்கிற ஆமையின் ஓட்டின் மேல் கொட்டினால் வலிக்குமா, வலிக்காதா'....என்று. "சரி, லேசாகக் கொட்டித்தான் பார்ப்போமே' என்று ஒரு கொட்டு கொட்டியது! ஆமை பேசாமல் இருந்தது. 

தேளுக்கு சந்தேகம். "லேசாகக் கொட்டியதால் வலிக்கவில்லையோ?...கொஞ்சம் பலமாக கொட்டினால் என்ன...' என்று அழுத்தமாகக் கொட்டியது. 

""என்ன தம்பி உன் புத்தியைக் காட்டுறியே?'' என்றது ஆமை. 

""இல்லண்ணே....கொஞ்சம் வழுக்கிற மாதிரி இருந்தது!.... அதனால கொடுக்கால அழுத்திப் பிடிச்சுக்கிட்டேன்!...அவ்வளவுதான்...'' என்று கூறிச் சமாளித்தது. 
 கரை நெருங்கியது. 

""நான் கொட்டினால் எவ்வளவு பெரிய மிருகமும் அலறி ஓடும். இந்த ஆமை கொஞ்சம்கூட அசையமாட்டேங்குதே.... கரைதான் நெருங்கியாச்சே!...... கொஞ்சம் வேகமாக கொட்டுவோம்..""என்று வேகமாக கொட்டியது! 

""நீ சரியாக வரமாட்டே போலிருக்கே?'' என்று ஆமை கடிந்துகொண்டது. 

""பிறந்தது முதலே கொட்டிப் பழகிட்டேன்....

உனக்காக என் பழக்கத்தை மாத்திக்க முடியாது!....

நீதான் அனுசரித்துப் போகணும்!...'' என்று திமிராகப் பேசியது. 

""எனக்கும் ஒரு பழக்கம் உண்டு!'' என்று சொல்லி ஆமை நீரில் மூழ்கியது. நீருக்குள் நீந்தியே கரையை அடைந்தது. 

தேள் நீரில் இறந்து மிதந்தது. 

உதவி செய்பவருக்கு உபத்திரவம் செய்தால் இதுதான் நடக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com