பாராட்டுப் பாமாலை! 13: அறிவை ஊட்டும் ஆலயம்!
மகாராஷ்டிர மாநிலம் ஓர் ஊரில்"யுவ சேத்னா' தொண்டு நிறுவனத்தைஅமைத்தவர் பெயர்தான் "அமர் கமால்கர்'


மகாராஷ்டிர மாநிலம் ஓர் ஊரில்
"யுவ சேத்னா' தொண்டு நிறுவனத்தை
அமைத்தவர் பெயர்தான் "அமர் கமால்கர்'
அவருக்கும் ராணிக்கும் திருமணமாம்!
இருவரும் சேர்ந்தே முடிவெடுத்தார்
"எல்லா நண்பரும் உறவினரும்
திருமணப் பரிசாய் பொருள்களையும்
திரண்ட பணத்தையும் தரவேண்டாம்!....
...புத்தகம் பரிசாய் அளித்திடுக'... - எனப்
புதுமை செய்தார் அன்பளிப்பில்!
எத்தனை எத்தனை புத்தகங்கள்
இருவர்க்கும் பரிசாய் வந்தனவே!
அனைத்து நூல்களும் இடம்பெற்ற
அறிவை ஊட்டும் ஆலயத்தை
நினைத்த வண்ணம் நிறுவிவிட்டார்!
நித்தம் பலரும் பயன் பெற்றார்!
அவ்வப்போது அரசு நடத்திவரும்
அனைத்துப் போட்டித் தேர்வுக்கும்
எவ்வளவு விபரம் வேண்டிடுமோ
இங்கே பெற்றிட வகை செய்தார்!
ஏராளமான பேர்க்கு உதவிவரும்
இத்தகு இனிய தம்பதிக்கு
தாராளமாக பாராட்டுகள்
தந்தே மகிழ்வோம் யாவருமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...