சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

என் கடமை!

மிக நல்ல இளம் துறவி ஒருவர் இருந்தார். அருள் வடிவம் கொண்ட முகம். அன்பும் கருணையும் தவழும் வடிவம் கொண்டவர் அவர்.

News image
Updated On :24 பிப்ரவரி 2018, 3:16 pm

அ. ராஜா ரகுமான்

மிக நல்ல இளம் துறவி ஒருவர் இருந்தார். அருள் வடிவம் கொண்ட முகம். அன்பும் கருணையும் தவழும் வடிவம் கொண்டவர் அவர். ஒரு நாள் ஒரு வனத்தில் நடந்து சென்றார். வனத்தில் நெடிது உயர்ந்த மரங்களும், பல்வேறு விதமான புஷ்பச் செடிகளும், கொடிகளும் இருந்சன. அந்த இடம் ரம்மியமாக இகுந்தது. 
அதில் ஒரு செடியில் சகலரையும் வசீகரிக்கும் மணம் மிகுந்த மலர்கள் பூத்திருந்தன. அந்த நல்ல வாசனை துறவியை எட்டியது. அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. ""எத்தகைய தெய்வீக மணம் இது!'' மனதை மயக்குகிறதே என்று எண்ணிக்கொண்டே மணம் வந்த திசையை நோக்கி நடக்கலானார். அங்கு திவ்யமான அந்தச் செடியைக் கண்டார். அதில் மலர்கள் புதிதாய்ப் பூத்துக் குலுங்கியிருந்தன. 
துறவி செடியின் அருகில் சென்றார். மலர்களைப் பறிக்காமல் அதைக் கிளையுடன் இழுத்து முகர்ந்து பார்த்தார். அதன் வாசனையை அனுபவித்தார். பிறகு கிளையை அதன் போக்கில் விட்டுவிட்டார். 
திடீரென்று ஒரு தேவதை தோன்றியது. ""வாசனையைத் திருடுகின்றாயே இது சரியா?'' என்று கேட்டது.
இதைக் கேட்ட துறவி திடுக்கிட்டார். ""நான் மலரைப் பறிக்கவில்லையே....மணத்தை மட்டுமே முகர்ந்தேன்....என்னை திருடன் என்று குற்றம் சாட்டுகிறாயே இது நியாயமா?'' என்று கேட்டார். 
தேவதை பதில் ஏதும் சொல்லவில்லை. துறவிக்கு வருத்தமாகப் போய்விட்டது! அருகில் இருந்த ஒரு கல்மீது அமர்ந்தார். 
தேவதையும் துறவியும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பூக்களைத் தொடுத்து விற்பவன் ஒருவன் அங்கு வந்தான். மணம் மிகுந்த அந்த மலர்களை பறித்துக் கூடையில் போட்டுக்கொண்டான். பிறகு சந்தோஷமாகப் பாடிக்கொண்டே புறப்பட்டான். 
இதைப் பார்த்துக்கொண்டிருந்த துறவியால் தாங்க முடியவில்லை. அவர் தேவதையிடம் வாய்விட்டுக் கேட்டுவிட்டார். 
""நான் அந்த மணம் நிறைந்த மலர்களை பறிக்காமல் முகர்ந்தேன்....அதை நீ திருட்டு என்றாய்!....இப்போது இவனோ எல்லாவற்றையும் பறித்துச் செல்கிறான்!.....நீயோ பேசாமலிருக்கிறாய் ! என்னிடம் குற்றம் கண்ட நீ இப்போது ஏன் எதுவும் பேசவில்லை?'' என்று கேட்டார் அந்த இளம் துறவி.
அதற்கு தேவதை, ""அருளே வடிவான துறவி சிறு தவறும் செய்யக்கூடாது!. அப்படித் தவறு நிகழுமாயின் அவர்களைத் தடுத்து நல்வழிப் படுத்துவதுதான் என் கடமை!....மற்றவர்களைப் பற்றி நான் எதுவும் பேசுவதில்லை!'' என்று கூறியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.