ஞானக்கிளி!


நான் துபாய் போகிறேன்....
ஞானம் மரக்கிளையில் வந்து அமர்ந்தது! சிவகாமி ஒரு மாம்பழத்தை நீட்டினாள். அலகால் கொத்திக் கொஞ்சம் எடுத்தது! பாத்திமா தந்த பாலையும் ருசி பார்த்தது. அதைப் பார்த்த சிறுவர்களுக்கு மகிழ்ச்சி!
""இங்கே இருக்கிற அணில், சிட்டுக்குருவி, மைனாவுக்கும் தானியம் கொடுங்க....''
""ஞானம் சொல்வதற்குள்ளேயே மேரி, அரிசி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை வைத்தாள். ரகுமான் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்தான்.
""ஞானம்,... இன்றைக்கு என்ன சொல்லப்போறே?....''
""நீங்க எதாவது சொல்லுங்க...,அப்புறமா நான் சொல்றேன்!''
எல்லோரும் யோசித்தார்கள். பீட்டர், அப்துல் என்ற சிறுவனை ஞானத்தின் முன் நிறுத்தினான்.
""உனக்கு என்ன பிரச்னை?...'' ஞானம் கேட்டது!
""கிளியக்கா!....அம்மா, அப்பா எது சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்!....படிப்பிலும் சுமார்தான்!....எங்க மாமா துபாயிலே இருக்கிறார்....நானும் அங்கே போகலாம்னு பார்க்கிறேன்....அங்கே அவர் நடத்தற கடையிலே வேலை பார்த்துப் பிழைச்சுக்குவேன்....பள்ளிக்கூடம், வீடு, இதிலிருந்தெல்லாம் எனக்கு விடுதலை வேணும்...''
இதைக்கேட்ட ஞானம், ""பெரியவர் தங்கமணி வெகு நாட்களுக்கு முன்னாலே எனக்கு ஒரு கதை சொன்னார்....அதைச் சொல்றேன்!....அப்புறமா அப்தும் விஷயத்தைப் பார்ப்போம்!'' என்றது.
கதை என்றதும் அமைதி!... குழந்தைகள் ஆவலோடு கேட்கத் தொடங்கினர். ஞானம் கதையை ஆரம்பித்தது....
...""ஒரு காடு!....அங்கே துறவி ஒருவர் இருந்தார்....அவர் இளைஞனாக இருந்த போதே வீட்டை விட்டு வந்தவர். பெற்றோருக்கு அவரது உதவி தேவைப்பட்டது!....ஆனா அவங்க பேச்சைக் கேட்காமக் கிளம்பினவர்......காட்டிலே தவம் இருந்தார்....எதற்காகத் தவம் இருப்பாங்க?....''
""அவங்க நினைச்சது நடக்கணும்!....உலகம் நல்லா இருக்கணும்!...
மனசுலே அமைதி ஏற்படணும்!...'' என்று குழந்தைகள் ஆளுக்கொன்றாகக் கூறினர்.
""அந்தத் துறவி தவ வலிமையினாலே தான் நினைச்சது நடக்கணும்னு விரும்பினார்....ஒரு நாள்!....அவருக்கு அந்த ஆற்றல் வந்திடுச்சு!...''
""அது எப்படி அவருக்குத் தெரிஞ்சுது?...'' என்றான் பாபு
மேரி தண்ணீர் கிண்ணத்தை நீட்டினாள். ஞானம் நாக்கால் கொஞ்சம் குடித்தது. அதை ரசித்தவாறு பிள்ளைகள் கதையைத் தொடர்ந்து கேட்க ஆர்வமாக இருந்தார்கள்!
கிளி வரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...