வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொன்மொழிகள்!

எதிர்காலம் என்ற ஒன்றைப் பற்றி நீங்கள் நினைக்காவிட்டால் எதிர்காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடலாம்! 

News image
Updated On :23 ஜூன் 2018, 12:23 pm

அ. ராஜா ரகுமான்

எதிர்காலம் என்ற ஒன்றைப் பற்றி நீங்கள் நினைக்காவிட்டால் எதிர்காலம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடலாம்! 

- ஹென்றிஃபோர்டு


மற்றவனுக்குக் கொடுப்பவன்தான் தனக்குத் தானே கொடுத்துக்கொள்பவனாவான். 

- புல்லர் லிட்டன்


நேற்றைய தினம் இறந்து விட்டது! நாளைய தினம் இன்னும் பிறக்கவில்லை! இன்றைய தினமே 
முக்கியம்! இதுவே நமக்குச் சொந்தமானது! 

- ஜெர்மி டெய்லர்


ஆண்டவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சுவர்க்கம்!...மற்றொன்று 
நன்றியுள்ள மனிதனின் இதயம்! 

- ஐசக்வால்டன்


உங்கள் கெளரவம் உங்கள் நாக்கு நுனியில் உள்ளது! 

- பீபர்ஸ்


வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை! 

- சாமுவேல் பட்லர்


ஒரே நேரத்தில் பத்து செயல்களைச் செய்வதைவிட ஒரே செயலை பத்து மடங்கு உற்சாகத்தோடு செய்! 

-பெர்னார்ட் ஷா


தவறுகளைக் கண்டிப்பதே நம் நோக்கமாகக் இருக்க வேண்டும்! தவறு செய்பவர்களை அல்ல! 

- மார்ஷியம்


எந்தக் காரியத்திலும் வெற்றியின் முதல் படி, அந்தக் காரியத்தில் ஆர்வம் கொண்டிருப்பதுதான்! 

- வில்லியம் ஆஸ்லர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.