ஞாயிற்றுக் கிழமை!....நல்ல வெயில்!....பறவைகள், விலங்குகள் அனைத்தும் மரங்கள், புதர்களைத் தஞ்சம் புகுந்தன.
நடு ஹாலில் மின் விசிறியின் வேகமான சுழற்சி! வீட்டிலுள்ள அத்தனை பேரும் தொலைக்காட்சிப் பெட்டியைச் சுற்றி முற்றுகை. வீட்டின் மூலையில் கிடக்கும் ஸ்டூலின் மீது நாலைந்து பனையோலை விசிறிகள்!
பனையோலை விசிறிகளை ஏளனத்துடன் நோக்கியது மின்விசிறி! முகத்தில் கர்வம்! பரிகாசம்!
""எல்லா வீடுகளுக்குள்ளும் நாங்களே ஆதிக்கம்! நீயும் ""விசிறி'' என்ற பெயருடன் எங்களைக் கேவலப் படுத்துகிறாய் ஏன்?'' எனக் கோபமாய்க் கேட்டது மின்விசிறி!
""எங்களோட பரம்பரைப் பெயர் அது! நேற்று வந்த உனக்கும் எங்கள் பெயரை வைத்து விட்டார்கள்! அதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்! இன்னும் எங்கள் தேவை மக்களுக்கு இருக்கிறது....இல்லாவிட்டால் ஏன் எங்களை இங்கு வைத்திருக்கிறார்கள்?'' என்றது ஒரு பனை ஓலை விசிறி சாந்தமாய்!
""இந்த ஜம்பத்திற்கு ஒன்றும் குறைச்சலில்லை!....நாங்கள் இல்லாம வீட்டுக்குள் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது தெரியுமா? ஓரம் கட்டின பிறகும் புத்தி வரவில்லை உனக்கு!'' என்றது மின் விசிறி.
""எந்த சமயத்திலும் உதவக்கூடியவர்கள் நாங்கள்!....தாழ்ச்சி, உயர்ச்சியை நாங்கள் பேசத் தயாராக இல்லை....'' என்றது பனை ஓலை விசிறி. அதற்கு வருத்தமாகத்தான் இருந்தது. பேச்சை நிறுத்திக் கொண்டது.
""புழக்கடையில் தூக்கி எறிய வேண்டிதுதான் உங்களை!....சீக்கிரமே அந்தக் காலமும் வரும்!....'' என்றது மின் விசிறி எரிச்சலுடன்!
தீடீரென்று மின்தடை! வீட்டில் போட்டிருந்த இன்வெர்டர் ரிப்பேருக்குப் போயிருந்தது!
தொலைக்காட்சிப் பெட்டி, மின் விளக்குகள், மின் விசிறி எல்லாமே நின்று விட்டன! கோடை வெய்யில் வேறு! வீட்டில் புழுக்கம்....எல்லோர் உடலிலும் வியர்வை! அணிந்து கொண்டிருந்த துணிகள் அனைத்தும் வியர்வையால் நனைந்து விட்டன. எல்லோருடைய உடல்களும் கசகச என்று ஆகிவிட்டன !
இப்போது எல்லோருடைய கைகளிலும் பனை ஓலை விசிறிகள்! சிவப்பு, பச்சை, நீலம், ஊதா வண்ணங்களில் அசைய ஆரம்பித்தன!
ஹஷ்!....சஷ்!....ஹஷ்!....சஷ்.....என்று அந்த விசிறிகளின் வீச்சில்கூட ஒரு அழகிய நாதம் இருந்தது! பல வண்ணத்தில் இருக்கும் பறவைகளின் சிறகுகள் போன்று அவைகளின் அசைவுகள் அற்புதமாக இருந்தன! இயற்கையான காற்றின் உஷ்ணம் கூட பனை ஓலைகளின் கீற்றுப் பட்டைகளில் குளிர்ந்து விட்டன!
வீட்டின் பெரியவர், ""என்னதான் ஃபேன் காற்று வேகமாக சுழன்றாலும் இந்த ஓலை விசிறியின் காற்றுக்கு ஈடாகாது!'' என்று கூறிக்கொண்டிருந்தார்!
""......."தன் கையே தனக்குதவி' ங்கிற தத்துவத்தை இந்தப் பனை ஓலை விசிறிகள் என்னமாய் சொல்லிக் காமிக்குதுங்க!'' என்றாள் பாட்டி!
கர்வம் சிறிதுமின்றி அடக்கமுள்ள விசிறிகளின் அழகிய அசைவும் கானமும் தொடர்ந்து கொண்டிருந்தது! அந்த அடக்கமான காற்றில் மின்விசிறியின் கர்வம் "ஃபூ' என ஊதித் தள்ளப்பட்டது!
மின்விசிறிக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது! தன் துடுக்குத்தனமான கர்வம் மிகுந்த பேச்சை எண்ணி வருந்தியது!
பனை ஓலை விசிறிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


