கண்ணாடிப் பேழைக்குள் ஒரு கல்!: ஞானக்கிளி! - 7
ஞானம் நேரத்தில் வந்தது! சிட்டுகுருவிகளும், அணில்களும், ஆசையாய் அதன் அருகில் அமர்ந்தன. பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்தனர்.


ஞானம் நேரத்தில் வந்தது! சிட்டுகுருவிகளும், அணில்களும், ஆசையாய் அதன் அருகில் அமர்ந்தன. பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்தனர்.
""போன வாரம் பாத்திமாவின் பாட்டி சொன்ன கதையை இங்கே வந்து சொன்ன பாத்திமாவுக்குப் பாராட்டுகள்!'' என்றது ஞானக்கிளி.
""அந்தக் கதை மா.கமலவேலன் என்பவர் எழுதினதாம்! அதைப் படிச்சிட்டு எனக்குச் சொன்னாள் பாட்டி!...அந்தக் கதையைத்தான் இங்கே உங்களுக்கு ஏத்தாமாதிரி கொஞ்சம் கற்பனையோட சொன்னேன்!''
""கதையின் கருத்து அமர்க்களம்!'' என்று எல்லோரும் பாத்திமாவின் கையைக் குலுக்கினர்.
அப்துல் கையை உயர்த்தி, ""கிளியக்கா!....இனிமே நான் என் வீட்டுக்கு வர்ற சிட்டுக்குருவி, அணில், கிளி எல்லாத்துக்கும் அரிசி, கம்பு, வைப்பேன்!....தண்ணீர் வைப்பேன்!...காகத்திற்கும் சோறு வைப்பேன்!...''
""அப்படியா மகிழ்ச்சி!....வாழ்த்துக்கள்! இப்போ உங்களுக்கு தங்கமணி ஐயா சொன்ன கதை ஒண்ணைச் சொல்லப்போறேன்!'' என்றது ஞானம். குழந்தைகள் ஆர்வமாய்க் கைகளைத் தட்டிக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டனர்! ஞானம் கதையை ஆரம்பித்தது!
-----""ஒரு வீடு. அந்த வீட்டிற்கு வெளியிலிருந்த வந்த அப்பா, ஒரு அட்டைப் பெட்டியைத் தூக்கி வந்தார்.....
""என்ன இதிலே?'' என்றாள் மகள் கோமதி ஆர்வமாய்.
பெட்டியிலிருந்ததை மெதுவாக எடுத்தார். அது ஒரு கண்ணாடிப் பேழை.
""எதுக்கு இந்தப் பேழை?,....கொடுங்க...., கடிகாரம், பேனா, பென்சில், இதெல்லாம் போட வசதியாய் இருக்கும்..'' என்றான் மகன் குமரன்.
...""இதைக் கூடத்திலே நிலைப் பேழை (ஷோ கேஸ்) யிலே வைக்கணும்.''... அப்பா அறையில் இருந்த அலமாரியைத் திறந்தார். வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை எடுத்து வந்தார். பிள்ளைகள் தொட்டுப்
பார்த்தனர்.
""என்னங்க இது?....ஏதாவது மந்திரக் கல்லா?'' எனக் கேட்டாள் அம்மா.
""மரத்தில் அங்கங்கே உளியால் செதுக்கியதுபோல் தோற்றம் ....அந்தக் கல் இரும்பைவிடக் கடினமாக இருந்தது.
""இது ஒரு மரம்!.....கோடிக்கணக்கான ஆண்டுகள் மண்ணிலேயே புதைஞ்சு கிடந்து இப்படிக் கல்லா மாறிடுச்சு!....கல்மரம்!....என் நண்பர் இதைப் பொக்கிஷமா வெச்சிருந்தார். நான் விரும்பிக் கேட்டதாலே தந்தார்...''
""ஹையா!....இனிமே இது நம்ம வீட்டிலே இருக்கும்!'' என்றாள் கோமதி.
""கோடி ரூபாய் கொடுத்தாலும் இது எங்கேயும் கிடைக்காது!'' ...அதன் பெருமையைச் சொல்லும்போதே அப்பாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி!
நிலைப் பேழையில் அதை வைத்தார். அம்மா பார்த்தாள். தாத்தாவும் பாட்டியும் வந்து பார்த்தார்கள். ""பத்திரமாப் பார்த்துக்குங்க..'' என்றாள் பாட்டி.
""பாட்டி முன்னாடி மரமா இருந்து கல்லா மாறின இதுக்கு ரொம்ப மதிப்புதான். ஆனா இதைவிட மதிப்பான ஒண்ணை நாங்க இங்கே வெச்சிருக்கோம்!...'' என்றான் குமரன்.
""நீ என்ன சொல்றே?'' .....பாட்டி ஆவலாய்க் கேட்டாள்.
கிளி வரும்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...