நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒரு நேரத்தில் ஒரு வேலை!..: ஞானக்கிளி! - 26

ஞானம் பறந்து வந்து கிளையில் அமர்ந்தது!  சிவகாமி வணக்கம் சொன்னாள். 

News image
Updated On :10 நவம்பர் 2018, 9:24 am

பூதலூர் முத்து

ஞானம் பறந்து வந்து கிளையில் அமர்ந்தது! 
சிவகாமி வணக்கம் சொன்னாள். 

""அக்கா!.....எங்க தெருவிலே சுமதின்னு ஒரு டீச்சர் இருக்காங்க.....அவங்களைப் பார்க்கப் போனேன்.... அவங்க ஒரு நிகழ்ச்சியைச் சொன்னாங்க....''
நிகழ்ச்சி என்றதும் பிள்ளைகள் கேட்கத் தயாரானார்கள். ஞானத்துக்கும் ஆர்வமாக இருந்தது. 

""சுமதி டீச்சர் வழக்கமா மளிகைப் பொருட்கள் வாங்கற கடைக்கு அவங்க பையன்க மோகனையும், குமரனையும் அனுப்பினாங்க...... வாங்க வேண்டிய பொருட்களை வரிசையாச் சொன்னாங்க....மோகன் ஒரு தாளில் குறிச்சான்....

......""நீ இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கியே....நீங்க சொல்லுங்கம்மா....''.....என்ற குமரன் அவனுடைய கைப்பேசியில் பதிவு செய்தான்.

சுமதி கொடுத்த துணிப்பையில் மோகன் எழுதிய தாளை வைத்தான். குமரன் பணத்தை வாங்கிச் சட்டைப் பையில் வைத்தான். இருவரும் மொபெட்டில் ஏறிக் கடைக்குப் போனார்கள்....வண்டியை மோகன் ஓட்டினான்...குமரன் பின்னால் அமர்ந்தபடி கைபேசியில் விளையாடினான்.

பாதி தூரம் வந்துவிட்டார்கள். ....""குமரா,....பையையும் சீட்டையும் வீட்டிலே மேசை மேலேயே வெச்சிட்டு வந்திட்டேன்...'' என்றான் மோகன்.....

....""அதனால் என்ன செல்லிலே இருக்கு கவலைப்படாதே!...'' .....

கடைக்கு முன்னால் வண்டியை நிறுத்தினார்கள். 

.....குமரன் பதற்றத்தோடு குரல் கொடுத்தான். ""மோகன்,.... விளையாட்டிலே அம்மா சொன்ன மளிகைப் பொருட்கள் பட்டியலை தவறுதலா நீக்கிவிட்டேன்!.....இப்போ என்ன செய்யறது?....''.......

---பிள்ளைகள் திகைப்போடு சிவகாமியைப் பார்த்தார்கள்.

அவள் தொடர்ந்தாள்.

""...மளிகைக் கடைக்காரர் சிவஞானம், ""தம்பிகளா,.... இந்தப் பையைப் பிடிங்க....எல்லாப் பொருளும் இதிலே இருக்கு.... அம்மா கைப்பேசியிலேயே சொல்லிட்டாங்க..... பணத்தைக் கொடுத்திட்டு நேரத்திலே புறப்படுங்க....'' என்றார்....

 ""இதிலிருந்து என்ன தெரிகிறது?''

""கையிலே கைப்பேசி,....செல்வதற்கு வண்டி,... இருந்தாலும் மறதியிலே எல்லாம் வீணாகும்!....'' என்றான் ரகுமான்.

 ""மறதி ஏன் வருது?''

""கவனக்குறைவுதான்!....எண்ணமெல்லாம் விளையாட்டிலே இருக்கறதாலே....செய்ய வேண்டிய முக்கியமான வேலை பாதிக்கது....ஒரு நேரத்திலே ஒரு வேலை என்று மனசைப் பழக்கணும்!...''

"சிவகாமி சொன்னதைக் கேட்டீங்களா?....சரியான கருத்து!....அந்தப் பழக்கம் வளர்ந்தா கவனக்குறைவுக்கு வேலையில்லே....சொன்ன வேலையை திட்டமிட்ட வேலையைச் சரியாச் செய்யலாம்!....''

ஞானம் சொன்னதை அவர்கள் உள்ளத்தில் பதித்தார்கள். சுமதி டீச்சரையும் போற்றினார்கள்.

கிளி வரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.