நன்றிக் கண்ணீர்!
80 வயதுடைய ஒரு மனிதருக்கு இதய வலி ஏற்பட்டது. மருத்துவ மனைக்குச் சென்றார். இதயத்தில் ஆப்பரேஷன் நடந்தது.


80 வயதுடைய ஒரு மனிதருக்கு இதய வலி ஏற்பட்டது. மருத்துவ மனைக்குச் சென்றார். இதயத்தில் ஆப்பரேஷன் நடந்தது.
நல்லபடியாக நடந்து முடிந்த பின்...
அவரிடம் ரூபாய் 2 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் கொடுத்தனர்....
அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....
அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
""அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்!....''
அதற்கு பெரியவர், "" எனக்கு அது பிரச்சினையில்லை, பில் 10 லட்சமாக இருந்தாலும் என்னால் தர முடியும்!.....'' ஆனால் 80 வருடமாக என் இதயத்தை பாதுகாத்த இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்கவில்லையே?.....
இவ்வளவு நாள், நான் இதனை உணர்ந்ததே இல்லை, இப்போது உணர்ந்தபோது, கண்ணீர் வழிகிறது,
மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்கு இரண்டு லட்சத்திற்க்கு பில்....
எல்லாம் வல்ல கடவுள் கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......
இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே.....
எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....
நமக்கு கிடைத்த வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்க வில்லை... என உணர்ந்தால், நாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே ஆலயத்திற்கு செல்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...