

ஞானக்கிளி! 21
ஞானம் வந்து கிளையில் அமர்ந்தது.
பாத்திமா எழுந்தாள்.
"அக்கா, வீட்டிலும், கையிலும் கடிகாரம்....இருந்தும் நேரத்தில் பள்ளிக்குச் செல்ல, இங்கே வர....ஓர் இடத்துக்குப் போக படாத பாடு படுகிறோம்!.....உன்னால் எப்படிச் சரியான நேரத்தில் வர முடிகிறது?....''
"ஒரு நாள் காற்று பலமாக அடித்தது! அதையும் தாண்டி இங்கே வந்தேன்!....எல்லாவற்றுக்கும் ஆர்வம்தான் காரணம்!...''
பாபு கேட்டான்....."அது மட்டுமா?...உன்னிடம் டி,வி, இவ்வை....நீ நேரத்தில் தூங்கி விடிகாலையிலே எழுந்திடுவே....அப்படித்தானே?....''
"டி.வி. இருந்தா என்ன?...ரிமோட் உன்னிடம்தானே இருக்கு தம்பி.....எப்போது இயக்கணும்....எப்போது நிறுத்தணும்னு உனக்குத்தான் கவனம் வேணும்....''
மேரி சொன்னாள்...."அக்கா,.....நான் நேரத்திலே தூங்குவேன்.....ஆனால் காலையிலே எழுந்திருக்க மனமே இல்லை.....தூக்கம் கண்ணை விட்டுப் போக மறுக்குது....''
உனக்கு மகிழ்ச்சியா?
"நீ இப்படிச் சொல்றே.....உங்க அப்பா காலையிலே எத்தனை மணிக்குக் கண் விழிக்கிறார் தெரியுமா...''
"தெரியாது!...''
"நீ எழுந்து பள்ளிக்கூடத்துக்குப் புறப்படறது ஒண்ணுதான் உன்னோட வேலை....அவங்க பொழு விடிவதற்கு முன்னாலேயே எழுந்து உனக்குக் காலை உணவு,....மதிய உணவு தயாரித்து....நீ எழுந்து பல் துலக்கியதும்.....பாலைத் தயாராகத் தருகிறார்கள்....
மேரிக்கு அந்தக் காட்சிகள் மனத்திரையில் ஓடின...
"உன் உடையைத் தேய்த்து வைக்க வேண்டும். இரவு நீ படிப்பதற்குக் கலைத்த புத்தகம்....நோட்டு....பேனா....பென்சில்...எல்லாவற்றையும் பையில் வைக்க வேண்டும்....காலை உணவை உனக்கு ஊட்ட வேண்டும்....புத்தகப் பை,....மதிய உணவு,....தண்ணீர்க்குடுவையோடு உரிய நேரத்தில் பள்ளிப் பேருந்தில் உன்னை ஏற்றிவிட வேண்டும்...''
ஞானத்துக்கு மூச்சு வாங்கியது....பாத்திமா தண்ணீர்க் கிண்ணத்தைக் கொண்டு சென்றாள்....
சொல்லவே அக்காவுக்கு மூச்சு இறைக்குதே....நம்ம அம்மாவெல்லாம் தினம் எவ்வளவு வேலை செய்யறாங்க....நினைக்கவே கண் கலங்குதே....''
சிவகாமி எழுந்தாள். "அக்கா,..... காலையில் எழுந்து வெளிக்கதவைத் திறத்தல்....செய்தித்தாள் ....பால் எடுத்துவருதல்,....செடிகளுக்கு நீர் ஊற்றுதல்,....காய்கறி தேவையென்றால் வாங்கி வருதல்....போர்வையை மடித்தல்....பாயைச் சுருட்டுதல்....தேவையில்லாமல் ஓடும் மின்விசிறி....எரியும் மின் விளக்குகளை நிறுத்துதல்....திடீரென்று மழை வந்தால் மாடிக்கு ஓடித் துணிகளை எடுத்து வருதல்.....அக்கம்பக்கம் உதவி என்றால் ஓடுதல்.....என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லுதல் இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்....
மேரிக்கு மயக்கமே வந்துவிடும்...''
ஞானம் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டது.
"எனக்கு இதையெல்லாம் கேட்க மகிழ்ச்சி!...'' என்றது.
"அக்கா!....அம்மா படற கஷ்டத்தைச் சொல்றோம்!....உனக்கு மகிழ்ச்சியா?...''
"உங்க அம்மா செய்யற இத்தனை வேலையைப் பற்றிய சிந்தனை உங்களுக்கு இருக்கே!....அது படிப்படியா வளர்ந்து அவங்களும் ஒரு ஜீவன்.....எந்திரம் இல்லே....அவங்களுக்கு நம்மாலான உதவியைச் செய்யணும்....இதிலே பெண்தான் செய்யணும்....ஆண்தான் செய்யணும்னு சட்டம் இல்லே.....நாமாகவே செய்து கொள்ளக்கூடிய நமக்கான வேலையைச் செய்யணும் என்ற உணர்வு வரும் என்று நினைச்சேன்....அந்த
மகிழ்ச்சிதான் அது!....''
"அக்காவும் அழகு!....அக்காவின் பேச்சும் அழகு!...''
பிள்ளைகள் கையொலி எழுப்பினார்கள்.
...கிளி வரும்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலி: ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனை

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: 5 அமைச்சா்கள் பதவியேற்பு

பண மோசடி வழக்கு: போ்ல்ஸ் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையம்: மத்திய அரசு அமைப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

