தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுவர் பாடல்!: உயர்ந்த மனிதர்!

"பிபான்ஸ்' நாட்டில் இருக்கின்ற பொழுது போக்கும் ஓரிடத்தில்ஏராளமான குப்பைகளை 

News image
Updated On :15 அக்டோபர் 2018, 10:13 am

அ.கருப்பையா

"பிபான்ஸ்' நாட்டில் இருக்கின்ற 
பொழுது போக்கும் ஓரிடத்தில்
ஏராளமான குப்பைகளை 
எடுக்கும் புதுமையைக் கேளுங்கள்!

அங்கே வாழும் பறவைகளுள் 
"ரூக்' எனும் இனவகைக் காக்கைகள்
பொங்கும் மதிநுட்பம் நிறைந்தனவாம்!
புரிந்தே மனிதருடன் பழகிடுமாம்!

"நிக்கோலஸ் வில்லியர்ஸ்' என்பவர்தான் 
நித்தம் காக்கைக்குப் பயிற்சி தந்தே 
அக்கம் பக்கத்து அசுத்தங்களை 
அகற்றும் பணிக்கு ஏவுகிறார்!

பயிற்சி பெற்ற காக்கைகளும் 
சிறு சிறு குப்பைகளையெல்லாம் -கொத்தி
உயரப் பறந்தோர் இடம் குவிக்கும்!
உணவே அதற்கு வெகுமதியாம்!

முழுதாய் நாட்டைத் தூய்மை செய்ய 
முயற்சி மேலும் மேற்கொண்டு 
குழுக்கள் பிரிந்து காக்கைக்கு 
வெவ்வேறு பயிற்சி அளிக்கின்றார்!

"தூய்மை இந்தியா' பேசும் நாம் 
தொண்டு செய்வோம் அவை போன்றே 
ஆய்வு, திட்டம் தேவையில்லை...
அவரவர் செயலே போதுமன்றோ?

"ஊதியம் கேட்கா ஊழியரை'...
உருவாக்கித் தூய்மைப் பணி செய்யும் 
சேதியை யாவர்க்கும் அறிவித்து 
செயலில் காட்டுதல் மிக நன்றாம்!

சுற்றுச் சூழல் காப்பதுடன் 
சுகமாய் வாழ எல்லோரும் 
கற்றுக் கொடுத்த பாடத்தைப் - பின் 
பற்றுகிறதாம் பிரான்ஸ் நாடும்! 

"காக்கைக்குப் பாராட்டு' இங்கிருந்து 
காதில் விழா(து) நாம் அறிவோம்!
ஊக்கம் கொடுத்துப் பயிற்சி தரும் 
உயர்ந்த மனிதர்க்குப் பாராட்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.