மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பொன்மொழிகள்!

திருப்தி உடையவர்களிடத்தில் சிறிது பொருள் இருந்தாலும் பெரும் செல்வம் உடையவராய் உணர்வர். 

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 5:05 am

* திருப்தி உடையவர்களிடத்தில் சிறிது பொருள் இருந்தாலும் பெரும் செல்வம் உடையவராய் உணர்வர். 

* மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது ஒரு பெரிய தானத்திற்கு ஒப்பான செயலாகும்.

* இன்முகம் உடையவர் உற்சாகத்தோடு இருப்பதோடு மற்றவர்களின் உதடுகளிலும் புன்னகை தவழச் செய்கிறார்.

* எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்.

* நல்ல முயற்சிகள் மகிழ்ச்சியைத் தரும். அந்த முயற்சிகள் பலன் தரும்போது மகிழ்ச்சி மேலும் அதிகமாகும்.

* சில வேளைகளில் புன்னகை என்பது பாலைவனத்தில் ஒரு துளி நீர் போன்றது!

* கஷ்டமான சூழ்நிலையை மகிழ்ச்சியுடனும் புன்முறுவலுடனும் எதிர்கொள்ளும் மனிதன் மகானாக மதிக்கப்படுகிறான். 

* யாராவது உங்களை தகிக்கும் தணல் போன்ற கோபத்துடன் பேசினால் அன்பெனும் தண்ணீரால் அந்த நெருப்பில் ஊற்றுங்கள்!

* அன்பான வார்த்தையானது பலரின் வேதனை மிக்க இதயங்களை குணமாக்கவல்லது!
தொகுப்பு: டி.எஸ்.சிவானந்தம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.