மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பாப்பா பாட்டு தரும் சேதி!

முறுக்கிய மீசை! சுடர் ஒளிர் விழிகள்!முண்டாசுக் கவி நம் பாரதி - பயந்து 

News image
Updated On :17 செப்டம்பர் 2018, 8:37 am

முறுக்கிய மீசை! சுடர் ஒளிர் விழிகள்!
முண்டாசுக் கவி நம் பாரதி - பயந்து 
ஒடுங்கிய பாரதர் உரிமைக் குரலை
உரத்துப் பாடிய மாகவி!


தாய்மொழிப் பற்றும்,  தாய்நாட்டன்பும்
இரண்டும் இரண்டு விழிகளாம்! - வெறும்வாய்ப் 
பேச்சு, பொய், ஜாலம், நடிப்பின்றி 
வாழ்நாள் முழுதும் ஒழுகினார்!


பூனைக் கதையைப் புரியும் விதமாய்ப் 
பாப்பாப் பாட்டில் பாடினார்! - தன்
மானம், ஒற்றுமை மிகுந்த சகோதரர் 
நாம்! என மனதில் உணர்த்தினார்!


சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல் எனப்
பிஞ்சுகள் மனதில் தூவினார்! - மறை
வள்ளுவர், கம்பர், இளங்கோ போலவே 
மாகவி  எவர்?... என வினவினார்!


காலையில் எழுதல், கற்றல், பாட்டென
சிறுவர்கள் செவிகளில் ஓதினார்! - அந்தி 
மாலைப் பொழுதில் ஓட்டமும், ஆட்டமும்
உடலுக்கு உறுதி எனக் கூறினார்!


தேசம், மக்கள், மொழிமேற் பற்றிவை 
தெய்வபக்தியின் மேலதாம்!- எனும் 
நேசம் எல்லோர்க்கும் வேண்டும் நிச்சயம்! - இது
பாப்பாப் பாட்டின் சேதியாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.