சொல்லுக்கு மரியாதை!
ஞானம் வந்ததும் பிள்ளைகள் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்தது.
ரகுமானின் முகம் சோர்வாக இருந்தது. அவனை அருகில் அழைத்தது.
"என்ன விஷயம்?.....உன் தங்கை ஆயிஷா நன்றாக இருக்கிறாளா?....அருளம்மையும் நலமா?...''
"அக்கா, ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க.... நீ நினைவிலே வெச்சிருக்கியே.....ஞானக்கிளி!....உனக்குப் பொருத்தமான பேரு!...''
"சரி, நீ ஏன் வாட்டமா இருக்கிறே?...''
"என்னோட ஒருத்தன் பள்ளியிலே படிக்கிறான்!.....பேரு ஜப்பார்....அவன் பேசறது, செய்யறது எல்லாமே எரிச்சலா இருக்கு!.....''
"என்ன செய்றான்?''
"ஒரு நாள் விளையாட்டுத் திடலுக்கு வந்தான்...,...அவசரமாத் தேவை....ஐம்பது ரூபாய் கொடு!....நீ வீட்டுக்குப் போவதற்குள் கொண்டு வந்து தர்றேன்னு சொன்னான்......கொடுத்தேன்.....அவன் வரவே இல்லை....மறுநாள் பள்ளிக்கும் வரலே!...அடுத்த நாள் வந்தான். ஆனா பணத்தைத் தரலே.....ஏதேதோ சொல்றான்....''
"ரகுமான் இந்த ஒண்ணுக்காக எரிச்சல் அடைய மாட்டான்....இன்னும் ஏதாவது இருக்கும்....'' என்றான் பாபு.
"திருவிழான்னு வீட்டோட நாகூர் போனோம்.....நான் மூணு நாள் பள்ளிக்குப் போகலே....வந்ததும் என்ன பாடம் நடந்தது என்ற விவிரம் சிலரிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். ஜப்பாரோட அறிவியல் கேள்வி-பதில் நோட்டைக் கேட்டேன்....எழுதியதும் உடனே தர்றேன்னு சொன்னேன்.......
.....தருவதாகச் சொன்னான்....மறுநாள் நோட்டு வீட்டிலே இருக்குன்னான்.....ஆனா வகுப்புக்கு எடுத்து வந்திருக்கான்.....அப்புறம் விக்டர் உனக்கு முன்னாடி கேட்டான்.....கொடுத்தேன்கிறான்.....அப்போ தற்செயலா விக்டரே வந்தான்...."ஏண்டா இந்த வேண்டாத பொய்?...'' என்றான்......
.......அக்கா, எதற்கு இந்தக் கெட்ட பழக்கம்?....இதனால் யாருக்கு என்ன லாபம்?.......சொல்லுக்கு மரியாதை தரவேண்டாமா?..''
ரகுமான் அழாத குறையாக கண்கலங்கினான்.
ஞானம் அவனுக்கு ஆறுதல் சொன்னது. "நீ இதற்காகக் கவலைப்படாதே!....சொல் வேறு,....செயல் வேறு....என்று நடப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி!.....அதனால் நல்ல பயன் எதுவுமில்லை.....அந்தப் பழக்கம் ஒரு பயனில்லாத மரம் போல வளரும்.... நல்லவர்கள் அவனை விட்டு விலகிவிடுவார்கள்....விஷயம் தெரிந்து பலரும் அவனை விலக்கி வைப்பார்கள்....அவனுடைய பெயரில் நம்பத் தகாதவன் என்ற முத்திரை ஒன்று விழும்! உதவி என்று அவன் குரல் கொடுத்தாலும் யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்....''
"நல்ல பழக்கம்தானே நமக்கு நன்மை தரும்!....ஜப்பார் இப்படி இருக்கிறானே.....'' என்று பிள்ளைகள் வருந்தினார்கள்.
"ரகுமான்....அவனாலே நீ மனம் தளராதே....உன் நல்ல வழியில் தொடர்ந்து போ!....பள்ளி அவனை மாற்றும்.....கல்வி நல்ல வழி காட்டும்!....அவனும் உன் வழியில் வந்து சேருவான்!''
"ஞானத்தின் நம்பிக்கை எல்லோரையும் மகிழ்வித்தது!
கிளி வரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது

சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலி: ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனை

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: 5 அமைச்சா்கள் பதவியேற்பு

பண மோசடி வழக்கு: போ்ல்ஸ் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

