சுற்றுச் சூழலுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கை அழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் விஞ்ஞானிகளின் தற்செயல் கண்டுபிடிப்பு இவ்விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜப்பானில் உள்ள பெட்பாட்டில் மறு சுழற்சி ஆலையில், பிரிட்டனின் "போர்ட் ஸவதுத்' பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது "இதெவனெல்லா சகையான்சிஸ்' என்ற புதிய வகை பாக்டீரியா ஒன்று பெட் பாட்டில் தயாரிக்கப் பயன்படும் பாலியெத்திலீன் தெரத்லே என்ற பிளாஸ்டிக்கை உண்டு வாழ்வதைக் கண்டு விஞ்ஞானிகள் பிரமித்தனர்.
பெட்வேல் என்ற நொதியே பிளாஸ்டிக் செரிக்கக் காரணமாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அதன் வேதி அமைப்பில் விஞ்ஞானிகள் சிறு மாற்றம் செய்தபோது, நொதியில் பிளாஸ்டிக் செரிக்கும் திறன் வேகமெடுத்துள்ளது! இது பற்றிப் பேசிய ஆராய்ச்சியாளர்கள் சில அமினோ அமிலங்களைக் கலப்பதன் மூலம் நொதியின் செயல்பாடு குறையும் என்று தாம் கணித்ததாகவும், ஆனால் நொதியின் பிளாஸ்டிக் செரிக்கும் திறன் மேலும் அதிகரித்ததைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் கூறினர்! இதனை மேலும் மேம்படுத்த அடுத்த கட்ட முயற்சி தொடரும் என்றும் சொன்னார்கள்.
சிதைவதற்கு 100 ஆணடுகளுக்கு மேல் ஆகும் பிளாஸ்டிக்கை இந்த நொதி வெறும் 45 நாட்களில் சிதைத்து விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது! தொழல் நுட்பத்தின் மூலம் புதிய நொதியின் பிளாஸ்டிக் செரிப்புத் திறனை மேம்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
ஆண்டிற்கு 80 லட்சம் டன் அளவிற்கு கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்தக் கழிவுகளால் சிறிய கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி, சுறா மீன், டால்பின் போன்ற பெரிய உயிரினஙகளும் செத்து மடிகின்றன. இந்தச் சூழலில் பிளாஸ்டிக் என்னும் எமனை அழிக்க புதிய என்சைம் கண்டறியப்பட்டுள்ளது! பிளாஸ்டிக் மறு சுழற்சிக்கான கதவுகளைத் திறக்கச் செய்துள்ளது! ""இவனல்லவோ சக்கை போடு போடுகிறான்!'' என்று சொல்லவைக்குமா "இதெவனெல்லா சகையான்சிஸ்' பாக்டீரியா? பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


