நட்பு!

இடம் - உயர்நிலைப் பள்ளி 10 - ஆம் வகுப்பு, ம ôந்தர் - வகுப்பு மாணவர்கள், இளங்கண்ணன், சோமு.
நட்பு!

அரங்கம்

காட்சி 1, 
இடம் - உயர்நிலைப் பள்ளி 10 - ஆம் வகுப்பு, ம ôந்தர் - வகுப்பு மாணவர்கள், இளங்கண்ணன், சோமு.
(ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்) 
ஆசிரியர் : மாணவச் செல்வங்களே! கேள்விகளுக்கு பதில் எழுதிய தாள்களைக் கொண்டு வந்து தாருங்கள்.
(மாணவர்கள் பதில் எழுதிய தாள்களை ஆசிரியரிடம் தருகிறார்கள். ஆசிரியர் தாள்களைத் திருத்தி சற்று நேரத்தில் மதிப்பெண்களைப் போட்டு விடுகிறார்.)
ஆசிரியர் : இளங்கண்ணன்!...
(இளங்கண்ணன் எழுந்து வருகிறான்)
ஆசிரியர் : என்ன தம்பி, வழக்கமாக நூற்றுக்கு நூறு வாங்குபவனாயிற்றே நீ!.... இப்பொழுது பத்து மதிப்பெண் குறைகிறதே! ஏன்?
இளங்கண்ணன் : ஆசிரியர் ஐயாவுக்கு வணக்கம்! நேற்று மாலை நான் பள்ளியிலிருந்து செல்லும்போது சாலையில் ஒரு பெரியவரை டூ வீலரில் வந்தவன் மோதித் தள்ளிவிட்டு வேகமாகப் போய்விட்டான்! சாலையில் யாரும் இல்லை. பெரியவரின் முழங்காலில் நல்ல அடிபட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவரைத் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டுப் பின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அவர் எப்படியிருக்கிறாரோ என்று மனதில் குழப்பம்!.... அதனால் இருக்கும்!
ஆசிரியர் : ஓ! அப்படியா?... நல்ல காரியம் செய்தாய்!....வாழ்த்துக்கள் தம்பி! எல்லோருக்கும் இந்த பண்பு இருந்தால் பிரச்னைகளே இருக்காது. உனக்கு இதனால் பத்து மதிப்பெண்கள் போட்டு விடுகிறேன். கல்வியின் பயன் சேவையும், மனத்தூய்மையும்தானப்பா! மாணவர்களே, இளங்கண்ணனுக்கு நீங்கள் அனைவரும் வாழ்த்துக்களைக் கூறுங்கள்! 
மாணவர்கள் : இளங்கண்ணனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!
(அனைவரும் கரவொலியெழுப்புகின்றனர்)
இளங்கண்ணன் : ஆசிரியர் ஐயாவுக்கும், மாணவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்! வகுப்பு முடிந்ததும் நான் இன்று மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும்!
சில மாணவர்கள் : இளங்கண்ணா, நாங்களும் உன்கூட வருகிறோம்!.... எங்களுக்கும் அந்தப் பெரியவரைப் பற்றிக் கவலையாக இருக்கிறது.
மேலும் சில மாணவர்கள் : ஆமாம்!.... நாங்களும் உன்கூட வருகிறோம்!.... அவருக்குத் தேவையான உதவிகளை நாங்களும் செய்வோம்!
இளங்கண்ணன் : சரி, சரி,.... வாருங்கள் போகலாம்! 
ஆசிரியர் : சோமு!
சோமு : ஐயா!
ஆசிரியர் : இங்கே வா!
(சோமு ஆசிரியர் அருகில் வருகிறான்)
ஆசிரியர் : நீ இளங்கண்ணன் பக்கத்திலேயே இருக்கிறாய்!... அதனால் என்ன பயன்?.... உன் மதிப்பெண் 50 தான்! ஏன் இப்படி?
சோமு : ஐயா, எங்கள் வீட்டில் மாலையில் என் அப்பாவைப் பார்க்க அவரது நண்பர்கள் வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது எனக்குத் தொந்தரவாக இருக்கிறது. 
ஆசிரியர் : இதெல்லாம் ஒரு காரணமா? நீ 
படிக்கும் இடத்தை மாற்றி விட வேண்டியதுதானே?... இளங்கண்ணனைப் பார்! சேவையும் செய்கிறான்.... அத்துடன் நல்ல மதிப்பெண்களையும் பெறுகிறான். அவனுடன் நீ சேர்ந்து படிக்கலாமே! உனக்கு அது நல்ல பலனைக் கொடுக்குமே!
சோமு : இனி அப்படியே செய்கிறேன் ஐயா. 
ஆசிரியர் : நல்லது.... அப்படியே செய்.
சோமு : (இளங்கண்ணனிடம்) நண்பா! நீயும் வா. மாலை வேளைகளில் நாம் இருவரும் சஞ்சீவி மலை படிக்கட்டு மண்டபத்தில் படிக்கலாம்!
இளங்கண்ணன் : எனக்கு உன்னைப் போன்றோரின் நட்பே முக்கியம்! நீ சொல்வதுபோலவே செய்வோம். நாளை முதல் அங்கு படிப்போம்! இன்று மருத்துவமனை செல்ல வேண்டும்!
(வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியே வருகிறார்கள்..... இளங்கண்ணன் சில மாணவர்களுடன் சென்று விடுகிறான்)
காட்சி 2, 
இடம் - சாலை, மாந்தர் - சோமு, சிவா. 
சிவா : என்ன சோமு, நண்பன் இளங்கண்ணனுடன் சேர்ந்து படிக்கப் போகிறாய்! இனிமேல் நீ நூற்றுக்கு நூறு வாங்குவாய்! அப்படித்தானே! வாழ்த்துகள்!
சோமு : நான் வாங்குகிறேனோ இல்லையோ!.... இனி இளங்கண்ணன் நூற்றுக்கு நூறு வாங்க மாட்டான்! 
சிவா : என்னப்பா சொல்றே? 
சோமு : சரி, சரி, இதை யார் கிட்டேயும் சொல்லி விடாதே!
சிவா : நீ என்ன செய்யப்போறே? அதைச் சொல்லு!
சோமு : ஏதோ செய்யப்போறேன்! அதெல்லாம் உனக்கு எதுக்கு?.... விடு! நான் போறேன்.
சிவா : பொறாமையாலே எதையாவது ஏடாகூடமா செஞ்சுடாதேடா..... 
காட்சி - 3, 
இடம் - மலையடிவாரம், மாந்தர் - இளங்கண்ணன், சோமு.
(இருவரும் மலை அடிவாரத்தில் சந்திக்கிறார்கள்)
இளங்கண்ணன் : என்ன, சோமு, மேலே ஏறி மண்டபத்துக்குப் போலாமா?
சோமு : ஓ! போகலாமே! ஒரு செய்தி! நம் ஊருக்கு ஒரு புதிய சர்க்கஸ் கம்பெனி வந்திருக்கு! யானை, புலி, கரடி போன்ற பல விலங்குகள்! அதோடு கிளிகள், பறவைகள் குட்டிச் சைக்கிளையெல்லாம் ஓட்டுகின்றனவாம்! மேலும், பல விளையாட்டுகள்! எல்லாம் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்குதாம்! டான்ùஸல்லாம் கூட ஆடறாங்களாம்! 
இளங்கண்ணன் : அதனாலே என்ன? நீ என்ன சொல்ல வர்றே?
சோமு : நாம் இன்னிக்கு சர்க்கஸ் பார்க்கப் போலாம்!.... நானே உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கறேன்! முதல் வகுப்பு டிக்கட்! சர்க்கஸ் எல்லாம் கிட்டே உட்கார்ந்து பார்த்தாத்தான் நல்லா இருக்கும்! 
இளங்கண்ணண் : அப்போ நீ படிக்க வரலியா? 
சோமு : இன்னிக்கு மட்டும் போகலாம் கண்ணா!.... சர்க்கஸ் பார்த்துட்டு இரவு ஒரு மணி நேரம் படிச்சுக்கிட்டா போகுது! நாளை முதல் ஒழுங்காப் படிப்போம்! இன்னிக்கு ஒரு நாள் மட்டும்தானே! ப்ளீஸ்டா!
இளங்கண்ணன் : ம்... சரி போகலாம்.... எனக்கும் நீ சொன்னதிலேர்ந்து சர்க்கஸ் பார்க்க ஆசையாத்தான் இருக்கு! 
காட்சி - 4, 
இடம் - சாலை, மாந்தர் - சிவா, சோமு, இளங்கண்ணன்.
(இளங்கண்ணன் மலையடிவாரத்தில் சோமுவைத் தேடுகிறான்..... அவனை அங்கு பார்க்க முடியவில்லை.... அவனைத் தேடிக்கொண்டு சாலைக்கு வருகிறான்.... அங்கே சிவாவும், சோமுவும் ஒரு ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை இளங்கண்ணன் பார்த்து விடுகிறான். )
இளங்கண்ணன் : (மனதிற்குள்)உள்ளே போனால் மறுபடியும் சோமுவிற்கு வீண் செலவு ஆகும்! நேற்றுத்தான் சர்க்கஸுக்கு வேறு செலவு செய்திருக்கிறான்அவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு வரும் வரை கடையின் வெளியே நிற்போம். )
(அவர்கள் பேசுவது இளங்கண்ணன் காதில் விழுகிறது. அதை மறைந்திருந்து கேட்கிறான்!)
சிவா : (சோமு) என்னடா? நேற்றைக்கு இளங்கண்ணனோடு சேர்ந்து படிச்சியா? என்ன பண்ணே? ஏதோ அவனைப் பண்ணப்போறேன்னு சொன்னியே என்ன ஆச்சு! 
சோமு : நேத்து நான் அவனைப் படிக்கவே விடலை! சர்க்கஸுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டேன்! இதே மாதிரி அவனை அடிக்கடி ஏதாவது இடத்துக்கு அடிக்கடி அழைச்சுக்கிட்டுப் போகலாம்னு இருக்கேன்!.... ஒரு நாள் நாடகம், ஒரு சினிமா! இப்படி!
சிவா : இதனாலே உன் படிப்பும்தான் கெடும்! இதெல்லாம் வேணாம்! ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு! 
சோமு : நான் விடிய, விடிய நல்லாக் கண் முழிச்சுப் படிப்பேன்! ஆனா அவனைப் படிக்க விடக்கூடாது! அதுதான் என்னோட லட்சியம்! நாளைக்கு அவனை ஒரு சினிமாவுக்கு அழைச்சுக்கிட்டுப் போகப்போறேன்! 
சிவா : நல்ல லட்சியம்! இந்த மாதிரி சிந்திக்கிறதை விடு! எத்தனை நாளைக்கு நீ கண் முழிச்சுப் படிப்பே? உடம்பு புண்ணாயிடும்! பரிட்சையிலே தூங்க ஆரம்பிச்சுடுவே! அடுத்தவனைக் கெடுக்கறது நல்லதில்லை! இனிமே நான் உன்கூடப் பேசப் போறதில்லை! இந்தா நீ வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீமுக்குப் பணம்! 
(பணத்தை டேபிளில் வைத்துவிட்டு சிவா கோபமாக வெளியேறுகிறான்)
(இந்தப் பேச்சுகள் இளங்கண்ணனின் மனதில் இடியாக விழுகிறது. சைக்கிளில் வீட்டை நோக்கி விரைகிறான். அப்பாவிடம் நடந்ததைச் சொல்லிவிட்டு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கலானான்---
சோமுவுடன் இப்போதெல்லாம் யாரும் சேருவதில்லை---நட்பு வட்டத்தை இழந்து தனிமைப்படுத்தப்
பட்டான் சோமு. இளங்கண்ணனுக்கு அவனைப் 
பார்த்தால் பாவமாக இருந்தது. அவனிடம் நட்பு பாராட்டுகிறான். அவன் திருந்தி நல்லபடியாகப் படிக்க உதவிகள் செய்கிறான். அவனது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறான். சோமுவின் கண்களில் கண்ணீர்த் துளிகள்! அது அவன் திருந்திவிட்டான் என்பதற்கு அடையாளமாகத் தெரிந்தது!) 
- திரை-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com