ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: உத்தரகண்ட் மாநிலம்

சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா 88 ச.கி.மீ. பரப்பிற்கு பரந்து விரிந்துள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2019, 1:18 pm

சென்ற இதழ் தொடர்ச்சி.....

 பூக்களின் பள்ளத்தாக்கு - தேசியப் பூங்கா! 

சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா 88 ச.கி.மீ. பரப்பிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்தப் பூங்கா முழுவதும் பூக்களால் நிறைந்திருக்கும் என்பதே இதன் தனிச் சிறப்பாகும். இது யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காண்போரை சொக்க வைக்கும் அழகு கொண்டது.

ராஜாஜி தேசியப் பூங்கா! 

இது இமயமலை அடிவாரம் அருகே உள்ள சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ள தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம்.  820 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்தப் பூங்கா சிவாலிக் மலைத்தொடருக்கும், கங்கைச் சமவெளிக்கும் இடையில் அமைந்துள்ளது. இத்தகைய பலவகைப்பட்ட நில அமைப்பு கொண்ட இடத்தில் இருப்பதாலும் இங்கு மிக அடர்ந்த வனப்பகுதி இருப்பதாலும், பலவகைப்பட்ட விலங்கினங்களும் இங்கு அதிக அளவில் வசிக்கின்றன. 

வங்கப்புலி, சிறுத்தை, ஆசியப்பூனை, காட்டுப்பூனை, வரிக்கழுதைப் புலி, மலை ஆடு, இந்தியக் குழி முயல், தேன் உண்ணும் கரடி, ராஜநாகம், குள்ள நரி, காட்டுப்பன்றி, செங்குரங்கு, முள்ளம்பன்றி, உடும்பு, மலைப்பாம்பு எனப் பலவகையான உயிரினங்கள் இங்குள்ளன. 315 - க்கும் மேற்பட்ட பறவையினங்களும் இப்பூங்காவில் காணப்படுகின்றன. 

கோவிந்த் பாசு விகார் வனவிலங்குகள்  சரணாலயம்! 

பனிச்சிறுத்தை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1955 - ஆம் ஆண்டு இந்தச் சரணாலயம் உருவாக்கப்பட்டது. உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள இந்தப் பூங்கா 957 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது! இது கார்வால் பகுதியின் மிக அழகிய பூங்காவாகும். இங்கு ஸ்வர்க் ரோஹினி, கறுப்புச் சிகரம், பந்தர் பஞ்ச் என மிகவும் அழகான மலைகள் உள்ளன. ஹார் - கி - டன் என்னும் பகுதி மலையேறுவதற்குச் சிறந்த இடம். நாற்புறமும் பச்சைப் பசேல் என்று மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு கொண்டது. யமுனை நதிக்கு நீர் ஆதாரங்கள் இங்குதான் உள்ளன. அழிந்து வரும் பல அரிய உயிரனங்களுக்கு இந்தக் காடு புகலிடமாக உள்ளது. புலிகள், காட்டுப்பன்றி, பனிச்சிறுத்தை, அரிய வகை மான்கள், அரிய வகை ஆடுகள், கருப்புக் கரடி, உள்ளிட்ட நிறைய உயிரினங்கள் இங்குள்ளன. 

கங்கோத்ரி தேசியப் பூங்கா! 

இந்த தேசியப் பூங்காவானது 1553 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு 15 வகையான பாலூட்டி உயிரினங்களும், 150 வகையான பறவை இனங்களும் உள்ளன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 

இந்த தேசியப் பூங்காக்களைத் தவிர பல காட்டுயிர் சரணாலயங்களும் உத்தரகண்ட மாநிலத்தில் உள்ளன. 

மலையேற்றப் பாதைகள்! 

உத்தரகண்ட் மா நிலத்தில் புதிதாக மலையேறுபவர்களுக்கான மலையேற்றப் பாதைகளுடன், அனுபவம் உள்ளவர்களுக்கான சாகச மலையேற்றப் பாதைகளும் உள்ளன. 

தொடக்க நிலை மலையேற்றப்பாதைகள்! 

நாக்டியா பள்ளத்தாக்குப் பாதை
சந்திரஷிலா பள்ளத்தாக்குப் பாதை
ஹர்க் - கி - டன் பாதை
ருயின் சரா தால்  பாதை
கேதார்நாத் வாசுகி தால் பாதை
கேதார் காந்தா மலையேற்றப் பாதை
பெட் னி புசியல் பாதை
போன்றவை புதிதாக மலையேறுபவர்களுக்கான எளிதான தொடக்க நிலை மலையேற்றப் பாதைகளாகும். 
கடினமான மலையேற்றப் பாதைகள்!
பஞ்ச கேதார் மலையேற்றப் பாதை
நந்தாதேவி மலையேற்றப் பாதை
ஓம் பர்வத் மலையேற்றப் பாதை
ஆடேன் கோல் மலையேற்றப் பாதை
என அனுபவமுள்ள மலையேற்ற சாகச பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கான மலைப் பாதைகளும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளன. 

மேலும் சில தகவல்கள்!

இமயமலை! 

இந்தியத் துணைக் கண்டத்தின் சமவெளிப் பகுதியையும், திபெத்திய மேட்டு நிலப் பகுதியையும் பிரிக்கும் ஒரு மலைத் தொடர். இந்தியத் துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. 

இமமலைத்தொடர் மேற்கு - வடமேற்குப் பகுதியிலிருந்து கிழக்கு - வடகிழக்குப் பகுதிவரை 2400 கி.மீ தூரம் வட்ட வில்லாக அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் அகலம் மேற்கில் 400 கி.மீ..... கிழக்கில் 150 கி.மீ. இமயமலையில் 100 -க்கும் மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. அவற்றுள் 14 சிகரங்கள் 8000 மீ. க்கும் மேல் உயரமானவை. எவரஸ்ட் சிகரம் 8848 மீ. உயரம் கொண்டது. 

இம்மலை மூன்று இணையான உபதொடர்களைக் கொண்டுள்ளது. மேலும் பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என 5 நாடுகளில் பரவியுள்ளது.

சிவாலிக் மலை! 

இமய மலையின் வெளிப் பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடர் ஆகும். இது சிந்து ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருந்து பிரம்மபுத்திரா நதி வரை 2,400 கி.மீ. நீளத்திற்குப் பரவியுள்ளது. இம்மைலைத் தொடரானது 10 கி.மீ முதல் 50 கி.மீ. வரைஅகலம் உடையது. கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 2000 மீட்டர்கள் வரை உயரமுடையது. 

டேராடூன் வன ஆராய்ச்சி மையம்!  
(FOREST RESEARCH INSTITUTION - FRI) 

டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தின் பிரதான கட்டடம் 1929 - ஆம் ஆண்டில் வைஸ்ராய் வெல்லிங்டனால் தொடங்கப்பட்டது. இது 450 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஒரு தோட்டத்தில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பிரதானக் கட்டடம், கிரேக்க - ரோமன் கட்டடக் கலையில் கட்டப்பட்டது. இது உலகிலேயே மிகப் பெரிய செங்கல் கட்டுமானமாக "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டடம் இந்தியாவின் தேசியப் பாரம்பரிய கட்டடங்களில் ஒன்றாகும்!

இக்கட்டடத்திற்குள் ஆய்வகங்கள், நூலகம், வளிமண்டல ஆய்வகம், தாவரவியல் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. 

காடு சார்ந்த பயிற்சி நிறுவனம் என்ற நிறுவனமும் டோராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் உள்ளது...., மேலும் இங்கு வனக் கல்வி இயக்குநரகம் (ஈஐதஉஇபஞதஅபஉ ஞஊ ஊஞதஉநப உஈமஇஅபஐஞச), இந்திய வனக் கணக்கீடு...., (ஊஞதஉநப நமதயஉவ ஞஊ ஐசஈஐஅ), இந்திரா காந்தி தேசிய வனக் கழகம் (ஐசஈஐதஅ எஅசஈஏஐ சஅபஐஞசஅக ஊஞதஉநப அஇஅஈஉஙவ),... இந்திய வனங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபை (ஐஇஊதஉ) உள்ளிட்ட பல அமைப்புகள் உள்ளன. 

நந்தாதேவி சிகரம்! 

சமோலி மாவட்டத்தில் உள்ள நந்தாதேவி சிகரம் இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரம். மலையின் முழுப்பகுதியும் இந்தியாவில் இருப்பது என்று பார்த்தால் இதுவே மிகவும் உயரமானது. நந்தாதேவி சிகரம் 7816 மீட்டர் உயரம் கொண்டது. இந்தியாவின் முதல் உயரமான கஞ்சன் ஜங்கா சிகரம், இந்தியா- நேபாளம் ஆகிய இரு நாடுகளையும் தொட்டுக்கொண்டு உள்ளது. 

தேவபூமி உத்தரகண்ட் என்பது எளிதில் மறக்கமுடியாத இயற்கை எழில் சூழ்ந்த மாநிலம். உயரமான மலைகள், பளபளக்கும் நீரோடைகள், கண்கவர் புல்வெளிகள், பனிப்பாறைகள் மற்றும் அதிசயமான ஏரிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிசய நிலப்பரப்பு. 

ஆன்மிக யாத்திரை பயணங்கள், பனிச்சறுக்கு அனுபவம், ஒயிட் வாட்டர் ரிவர் ராஃப்டிங், யோகா, மலையேற்றம், வனவிலங்குள், மற்றும் பறவைகளை ரசிக்கச் சரணாலயங்கள், போன்ற அனுபவங்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த மாநிலம் இது!

 - நிறைவுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.