முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

பாலுவின் பேராசை!

பாலு, ராஜா அங்கிள் வீட்டுக்குச் சென்றான். ராஜா அங்கிளுடன்  அரட்டை அடிப்பான்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2020, 6:00 am IST

பாலு, ராஜா அங்கிள் வீட்டுக்குச் சென்றான். ராஜா அங்கிளுடன் அரட்டை அடிப்பான். ராஜா அங்கிள் நன்றாகக் கதை சொல்லுவார். டேபிள் டென்னிஸ் ஆடுவான். பாலுவுக்கு ராஜா அங்கிள் பிஸ்கெட், சாக்லேட்டெல்லாம் தருவார். அவர் வீட்டில் எப்பவும் ஒரு டப்பாவில், பிஸ்கெட்டும், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் சாக்லேட்டுகளும் இருக்கும்.
வழக்கம்போல் அன்றைக்கும், ராஜா கதைகள் எல்லாம் சொன்னார். அன்றைக்கு ரப்பர் பந்தில் கிரிக்கெட் ஆடினார்கள்
சந்தோஷமாகப் பொழுது போயிற்று. பாலுவுக்கு வேர்த்துக் கொட்டியது.
""ராஜா அங்கிள் தாகமா இருக்கு!'' என்றார்.
அங்கிள் ஒரு பாட்டில் தண்ணீரும், டம்ளரும் கொண்டுவந்தார். ""கொஞ்சமா குடி!.... நான் போய் உனக்கு சாக்லேட் கொண்டு வரேன்!'' என்றார். பாட்டில் நிறையச் சாக்லேட்டுகளுடன் வந்தார்.
ஒரு குறுகிய வாய் இருக்கிற பாட்டிலில் பாதிக்கு மேல் சாக்லேட்டுகள் இருந்தன. சாக்லேட் என்றால் பாலுவுக்கு ரொம்பப் பிடிக்கும்!
""குடுங்க அங்கிள்!'' என்றான் பாலு.
""உனக்கு எவ்வளவு வேணுமோ, அவ்வளவு எடுத்துக்கோ!...'' என்றார்.
பாட்டில் வாய் சற்று குறுகலாக இருந்தது. பாலு தன் பிஞ்சுக் கரங்களை ஆவலோடு பாட்டிலுக்குள் விட்டான். அவனது குட்டிக் கை நிறைய சாக்லேட்டை அள்ளினான். ஆனால் பாலுவால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. தவித்தான்.
""கையை வெளியே எடுக்க முடியலையே அங்கிள்!'' என்றான்.
""அப்படியா?.... சரி,.... இப்போ நீ ரெண்டு சாக்லேட்டை மட்டும் எடுத்துக் கொண்டு கையை எடு!'' என்றார் ராஜா அங்கிள்.
அவர் கூறிய படியே இரண்டு சாக்லேட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு சுலபமாகக் கையை வெளியே எடுத்தான் பாலு.
""இதுக்குத்தான் பேராசை படக்கூடாது!'' என்றார் ராஜா அங்கிள்.
பாலு, தான் பேராசைப்பட்டதை எண்ணி வெட்கப் பட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.