முந்நூறு ஆண்டு காலம்
மூழ்கினோம் அடிமை இருளில்
எந்நாளில் விடியல் என்றே
ஏங்கியே கிடந்த வேளை
உத்தமர் காந்தி வந்தார்
உண்மையைக் கையில் கொண்டார்
நித்தமும் தேசம் எங்கும்
நீண்டதோர் பயணம் செய்தார்!
ஒற்றுமை, துணிவு என்னும்
உணர்வினைத் தூண்டி, தேசப்
பற்றினை நல்லோர் ஊட்ட
பாமரர் எழுச்சி பெற்றார்!
அறவழிப் போராட்டங்கள்
அனைத்திலும் வெற்றி கண்டோம்!
பிறகுதான் நமது வலிமை
ஆள்பவர் புரிந்து கொண்டார்!
ஓயுதல் இல்லா உழைப்பு
உண்மையாம் அஹிம்சை முன்னர்
ஆயுதம் தோற்றுப் போகும் !
அதிசயம் நடக்கக் கண்டோம்!
தியாகம், நல் தூய்மை, வளமை
தெரிவிக்கும் வண்ணக் கொடியை
உயரத்தில் ஏற்றிப் போற்றி
உற்சாகம், இன்பம் கொள்வோம்!
உரிமையைப் பெற்ற நாமும்
உலகிலே உயர்ந்தோர் என்றே
பெருமையாய்ப் பேசும் வண்ணம்
பிறர் நலம் மதித்து வாழ்வோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

கவிஞா் புவியரசு மறைவு: தலைவா்கள் இரங்கல்

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் தொடக்கம்
ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளா்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகா்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



