தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொன்மொழிகள்

சுதந்திரத்திற்காகப் போராடும் லட்சியவாதிகள் அழியலாம்!.... சுதந்திர வேட்கை அழியவே அழியாது! 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN

சுதந்திரத்திற்காகப் போராடும் லட்சியவாதிகள் அழியலாம்!.... சுதந்திர வேட்கை அழியவே அழியாது! 

- சுபாஷ் சந்திர போஸ்

எங்கள் கனவு சுதந்திரமே!.... அதை அடைய நாங்கள் போராடுவோம்!.... நாங்கள் மரித்தாலும், எங்கள் சந்ததிகளும் அதை அடையும் வரை போராடுவதை நாங்கள் மகிழ்ச்சியோடு பார்த்திருப்போம்! 

- ஆஷ்ஃபகுல்லா.

நாடு சுதந்திரம் அடைவதற்காக எதிரிகளின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்வோம்! 

- சந்திர சேகர ஆசாத்

உலகின் வேறெந்த நாட்டையும் விட மேலான எனது நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டத்தையும், மகிழ்ச்சியையும், அன்பையும் காண சூரிய தேவன் இங்கு வரட்டும்!  

-  பகத் சிங்

என்னைப் பைத்தியக்காரன் என்கிறார்கள்!   சிறையில் கூட நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன்! 

- பகத் சிங்

மனிதர்கள் அன்புடன் ஒன்று சேர்ந்தால் அதன் சக்தி அளவிட இயலாதது! அங்கு ஆன்ம பலமும் பெருகிவிடும்! 

- வல்லபாய் படேல்

சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் ஆயிரக்கணக்கான சுதந்திரப் பயிர்களுக்கான விதைகளை மக்களிடையே விதைத்து விடுறார்கள்! 

- சுபாஷ் சந்திர போஸ்

நீங்கள் எங்களைத் தாக்கும்போது விழும் ஒவ்வொரு அடியும்,  சர்வாதிகாரத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கும் ஆணியாகும்! 

- லாலா லஜபதி ராய்.

உலகின் எந்த மூலையிலும் சர்வாதிகாரத்தை நாங்கள் எதிர்க்கிறோம்!.... எங்கள் மக்கள் எங்கள் நாட்டை ஆள வேண்டும்!

- கமலாபாய் சட்டோபாத்யாயா

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை! 

- பால கங்காதர திலகர்

ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்! இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே! வாழி! கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே, மனிதர் யாவும் சரி நிகர் சமானமாக வாழ்வமே!   

மகாகவி பாரதியார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.