தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அங்கிள் ஆன்டெனா

கைதேர்ந்த தொழில் நுட்ப நெசவாளியைப் போல வலை பின்னுகிறதே சிலந்தி! இதன் கலை நேர்த்தி ஆச்சரியமூட்டுகிறது. இது எப்படி?

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 12:30 am

தினமணி


கேள்வி:கைதேர்ந்த தொழில் நுட்ப நெசவாளியைப் போல வலை பின்னுகிறதே சிலந்தி! இதன் கலை நேர்த்தி ஆச்சரியமூட்டுகிறது. இது எப்படி?

பதில்:சிலந்திகள் தங்கள் வலையைப் பின்னுவிதற்கு அதன் உடலில் இருந்து வெளிவரும் ஒருவகை திரவத்தைப் பயன்படுத்துகிறது.

சிலந்திகளின் வகைகளுக்கு ஏற்ப இந்த திரவம் மாறுபடும். இவை பட்டு நூல்கள் போல இருக்கும். சில சிலந்திகளின் திரவம் சீக்கிரம் காய்ந்து விடக் கூடியதாகவும் மெல்லிதாகவும் இருக்கும். சிலவற்றுக்கு சற்றுக் கடினமானதாக இருக்கும். இன்னும் சிலவற்றுக்கு இடையிடையே சிறு சிறு மணிகளைக் கோர்த்தது போல இருக்கும்.

இப்படி வலை பின்னுவதற்கு அது எந்தப் பள்ளியிலும் போய் கற்கவில்லை. இயற்கை சிலந்திக்குக் கொடுத்த வரப்பிரசாதம் இது. பிறவியிலேயே இந்தத் திறமையுடன் பிறக்கிறது.

வெவ்வேறு வகை சிலந்திகள் வெவ்வேறு டிசைன்களில் தங்கள் வலைகளைப் பின்னுவதைப் பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால், இந்த வலைகளி பழசாகிவிட்டால்தான் பார்க்கக் கஷ்டமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.