பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நினைவுச் சுடர்!: அனுபவம்!

சுறுசுறுப்பும், வசீகரமான தோற்றமும் கொண்ட அந்த இளைஞர் காந்தியைச் சந்தித்தார்.  அந்த இளைஞரிடம் காந்தி. ""உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று வினவினார் காந்தி.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 12:30 am

மாதவன்

சுறுசுறுப்பும், வசீகரமான தோற்றமும் கொண்ட அந்த இளைஞர் காந்தியைச் சந்தித்தார்.  அந்த இளைஞரிடம் காந்தி. ""உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று வினவினார் காந்தி.

""நான் தொழிலாளர் பிரச்னைகள் குறித்துப் படித்து, அலகாபாத் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் வாங்கியிருக்கிறேன்..... தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.'' என்று ஆர்வத்துடன் சொன்னார் அந்த இளைஞர்.

மகாத்மாவோ, ""தொழிலாளர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்பும் உங்கள் ஆர்வத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்கு நீங்கள் வாங்கியிருக்கும் பட்டம் மட்டும் போதாது!.... நீங்கள் முதலில் ஒரு தொழிலாளியாக ஏதாவது ஒரு தொழிற்கூடத்தில் வேலை பார்க்க வேண்டும்!.... அதுதான் மிக முக்கியம்!.... அந்த அனுபவமே மிக முக்கியம்!  தொழிலாளர்களுக்கு உதவ நினைக்கும் உங்கள் ஆர்வத்துக்கு, அதுவே சரியான வழியைக் காண்பிக்கும்! '' என்று கூறினார்.

""அவ்வாறு தொழிலாளியாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன்.... நீங்களே ஏதாவது ஒரு தொழிற்கூடத்தில் எனக்கு வேலை வாங்கித் தர முடியுமா?'' என்று உடனே சுறுசுறுப்புடன் கேட்டார் அந்த இளைஞர். 

காந்தி சிரித்துக்கொண்டே, அலகாபாத்திலுள்ள ஓர் ஆலையில் வேலை பார்க்க அந்த இளைஞருக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கினார். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தும் அந்த இளைஞர் பல மாதங்கள் அந்த ஆலையில் தொழிலாளியாகப் பணி புரிந்தார்.  அதற்குப் பிறகே தொழிலாளர் இயக்கங்களில் பணி புரிய அனுமதி தந்தார் காந்தியடிகள்!

அந்த இளைஞர் பெயர்தான் "குல்சாரி லால் நந்தா!'

நம் நாட்டில் மிகக் குறுகிய காலம் பிரதமாராகப்  பணியாற்றியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.