கதைப்பாடல்!: சுப்பு செய்த சேவை!
வேம்பு மாமா வுக்கு ரொம்ப உடம்பு சரியில்லே!அவர் வீட்டை வெள்ளை அடிச்சு சுத்தம்


வேம்பு மாமா வுக்கு ரொம்ப
உடம்பு சரியில்லே!
அவர் வீட்டை வெள்ளை அடிச்சு சுத்தம்
செய்ய முடியலே!
பொங்கலென்ற பண்டிகைநாள்
நெருங்கி வருகுது!
அவர் பிள்ளைகளோ ரொம்பச்
சின்னக் குழந்தைகளாகும்!
இப்போ என்ன செய்தால் வீடு
ரொம்பப் பளிச்சுனு ஆகும்?
பொங்கல் பண்டிகையை பிள்ளைகள்
கொண்டாட வேணும்!
அந்தத் தெருவில் உள்ள "சுப்பு'
ரொம்ப நல்லவன்!
தேடிச் சேவை செய்வதிலே
விருப்பம் கொள்பவன்!
""வேம்பு மாமா கவலை வேண்டாம்
நானிருக்கிறேன்'' - என
நண்பரோடு சுவற்றுக்கெல்லாம்
வெள்ளையடிக்கிறான்!
அவர் வீட்டு வாசல்படியினிலே
தோரணம் கட்டித்
தொங்கவிட்டுச் சுவர்களுக்குக்
காவி பூசுறான்!
கடையில் அரிசி, வெல்லமெல்லாம்
வாங்கி வருகிறான்!
கையில் கரும்பு, மஞ்சள் இஞ்சிக்
கொத்தும் கொணர்ந்தான்!
அவர் வீட்டு மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்டினான்!
வேம்பு மாமா உடல் தேறிக்
குணமடைந்துவிட்டார்!
விருப்பம்போலப் பொங்கலை அவர்
வைத்து மகிழ்ந்தார்!
பொங்கி வந்த பொங்கலைப்
பார்த்துப் பிள்ளைகள்...
""பொங்கலோ பொங்கல்!'' எனக்
கூறி மகிழ்ந்தனர்!
வேம்பு மாமா சுப்புவுக்கு
நன்றி கூறினார்!
கையில் கிண்ணத்திலே பொங்கலோடு
கரும்பையும் தந்தார்!
சுப்பு பொங்கலைச் சுவைத்துவிட்டுக்
கரும்பையும் கடித்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...