கேள்வி: ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது, அதிகரித்து விட்டது என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 60 முதல் 80 ரூபாய் என் றெல்லாம் சொல்லப்படுகிறது. உலகில் மிகவும் அதிக மதிப்பு உள்ள நாணயம் எந்த நாட்டின் நாணயம் என்று சொல்லுங்களேன்....
பதில்: நாம் எல்லோருமே அமெரிக்க டாலர் அல்லது இங்கிலாந்தின் பவுண்ட்தான் உலகில் மிகவும் அதிக மதிப்புள்ள நாணயங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. நாணயங்களின் மதிப்பு அடிக்கடி கூடும் அல்லது குறையும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி..... குவைத், அதிக அளவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடு. ஆகவே, உலகில் மிகவும் செல்வமான நாடுகளில் ஒன்று குவைத். இந்த நாட்டின் நாணயத்தின் பெயர் தினார். இந்த தினார்தான் உலகின் மிக அதிக மதிப்புள்ள நாணயமாகப் பல காலமாக இருந்து வருகிறது.
இந்திய ரூபாய்கள் சுமாராக 76 கொடுத்தால்தான் ஒரு டாலர் கிடைக்கும். அதாவது ஒரு டாலரின் மதிப்பு 76 ரூபாய்கள். சரி, டாலருக்கே இவ்வளவு ரூபாய்கள் கொடுக்க வேண்டியிருக்கிறதே, இந்த டாலருக்கு எத்தனை தினார்கள் (குவைத் நாட்டு நாணயம்) கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஏறக்குறைய மூன்றே கால் டாலர்கள் (3.24) கொடுத் தால்தான் ஒரு டாலர் கிடைக்கும். அமெரிக்க டாலரின் மதிப்பு அவ்வளவுதான். குவைத் தினாருக்குப் பிறகு பாஹ்ரைன், ஓமன் மற்றும் ஜோர்டான் நாட்டின் தினார்களும் மதிப்பு மிகுந்தவை. அதாவது வரிசைப்படி பார்த்தால் குவைத், பாஹ்ரைன், ஓமன் தினார்கள் மதிப்பு மிகுந்தவை. அதன்பிறகு இங்கிலாந்தின் பவுண்ட். இந்த நாணய மதிப்பு வரிசையில் அமெரிக்க டாலர் 9-வது இடத்தில்தான் இருக்கிறது. அப்படியானால் இந்திய ரூபாய்? இப்ப எதுக்கு அது? பிறகு பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


