நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விடுகதைகள்

மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல...

News image
Updated On :11 ஜூலை 2020, 12:30 am

தினமணி

1. மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல...
2.முத்தான முத்துக்கள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை...
3. அரசன் ஆளாத கோட்டைக்கு, பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன்...
4.  பேச்சுக் கேட்குது, பேசுபவர் தெரியவில்லை...
5. நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான்....
6. சட்டையைக் கழற்ற முயன்றால் கண்ணீரும் கம்பலையும்தான்...
7. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ...
8. பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...
9. வெள்ளை ராஜாவுக்குக் கருப்புச் சட்டை...

விடைகள்


1. விழுது,
2.  நட்சத்திரங்கள், 
3. சூரியன், சந்திரன்,
4.  வானொலிப் பெட்டி, 
5.  முகம் பார்க்கும் கண்ணாடி,
6.  வெங்காயம், 
7.  சிரிப்பு,
8.  கண்,
9.  உளுந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.