வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அன்பும் அறிவும்!: பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!

இரவு!.... அறிவழகி நடந்து கொண்டிருக்கும்போது ஏதோ காலில் தடுக்கிற்று! குனிந்து பார்த்தபோது உலோகத்தினாலான ஒரு பொம்மை! சுமார் இரண்டரை அடி இருக்கும்! ரோபோ போல இருந்தது!

News image
Updated On :18 ஜூலை 2020, 12:30 am

இரவு!.... அறிவழகி நடந்து கொண்டிருக்கும்போது ஏதோ காலில் தடுக்கிற்று! குனிந்து பார்த்தபோது உலோகத்தினாலான ஒரு பொம்மை! சுமார் இரண்டரை அடி இருக்கும்! ரோபோ போல இருந்தது!
""உன் பெயர்?'' ரோபோ கேட்டது!
அறிவழகி திகைத்தாள்! தமிழ் பேசும் ரோபோ!
""உனக்கு தமிழ் தெரியுமா ரோபோ?''
""முதலில் ஒன்றைத் தெரிஞ்சுக்கோ!.... நான் ரோபோ இல்லை.... "ஷல்யூன்' என்ற கிரகத்திலிருந்து வருகிறேன்! ஃபேமிலி டூர்!.... சுமார் 12 கிரகத்தைச் சுற்றிப் பார்க்கலாம்னு வந்தோம்!....நான் வேற்றுக் கிரகத்து உயிரினம்!.... அமெரிக்காவின் ஒரு குக்கிராமத்தில் நாங்கள் இறங்கினோம்!.... நான்பறந்து ஊர்சுற்றிவிட்டு விண்கலத்தில் ஏறுவதற்கு முன்பு எங்கள் விண்கலம் புறப்பட்டுவிட்டது!.... என் தாயார் தகப்பனார் எல்லோரும் அதில் சென்றுவிட்டார்கள்!.... (கண்களில் கண்ணீர்!) எனக்குத் தமிழ் தெரியும்!....அது மட்டுமல்ல....இங்கு பேசும் சுமார் 3900 மொழிகள் எனக்குத் தெரியும்! '
""அடேங்கப்பா!..... அப்படியா?.... எப்படி?'' அறிவழகிக்கு வியப்பு!
""அது ஒன்றும் பெரிய வித்தை இல்லை!.... உலகில் எங்கள் விண்கலம் இறங்கியவுடன்.... மொழிகளின் வரிவடிவங்களை ஸ்கேன் செய்து கொண்டுவிடுவேன்!...... பிறகு உச்சரிப்புகளைப் பதிவு செய்து கொண்டேன்!.... ஷல்யூன் கிரக வாசிகளின் மூளை மிகவும் சக்தி வாய்ந்தது!.... இந்த பூமியில் சுமார் 7117 மொழிகள் பேசப்படுகின்றன. அதில் பாதிக்குமேல் என்னால் பேச முடியும்!.... ஆனால் இதற்கு ஒரு மாதகாலம் ஆயிற்று!......... எனக்குப் பின்புறம் இறக்கை இருக்கிறது!.... நான் ஒரு மாதமாக ஊர்,... இல்லையில்லை,... உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை!.... உன் பெயர்?''
""அறிவழகி!...''
""மிகவும் நல்ல பெயர்!....என் பெயர் "டிவ்யசித்!'.... பசிக்கிறது!....பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்!...சீக்கிரமா ஏதாவது கொண்டு வா!''
அறிவழகி உள்ளே சென்று தண்ணீருடன், தயிர்சாதமும், நெல்லிக்காய் ஊறுகாயும் கொண்டுவந்தாள். ஹிண்டாலியம் உலோகம்போல் இருந்த அந்த வேற்று கிரக உயிரினம் சாப்பிடுவதை ஆச்சரியத்துடன் பார்த்தாள்! அறிவழகிக்கு டிவ்யசித்துடன் சிநேகம் உண்டாகியது.
""சாப்பாடு பிரமாதம்!.... இதுக்கு என்ன பேர்?''
""தயிர்சாதம்!.... நெல்லிக்காய் ஊறுகாய்! அது சரி, திரும்ப நீ எப்படி ஊருக்குப் போவே?....அப்பா அம்மா திரும்ப வந்து அழைச்சிட்டுப் போவாங்களா?''
""தெரியலே.... இறக்கை இருக்கிற திமிரில் ஊர் சுற்றிவிட்டேன்!...., நான் காணோம் என்ற செய்தி தெரிந்திருக்கும்!... அவர்கள் அமெரிக்கக் குக்கிராமத்தில் நான் இறங்கிய இடத்தில் தேடியிருப்பார்கள்...... இப்போதைக்கு நீதான் எனக்கு உறவு!''
""சரி, என் ரூமுக்கு வா!...'' அறிவழகி அழைத்துக்கொண்டு போனாள்.
இரவில் இந்த ஒரு மாதத்தில் ஸ்வீகரித்துக்கொண்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் டிவ்யசித் பாடிக்காட்டியது! கதைகள் சொன்னது! சில மேல்நாட்டுக் கதைகளைக் கூட மொழி பெயர்த்து தமிழில் சொன்னது!.... அறிவழகிக்கு டிவ்யசித்தை விட மனமே இல்லை.... பாடல்களையும், கதைகளையும் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டாள்.
விடியற்காலை கண்விழித்துப் பார்த்தபோது பக்கத்தில் டிவ்யசித் இல்லை. அறிவழகிக்கு வருத்தமாகப் போய்விட்டது! டிவ்யசித் எப்பேர்ப்பட்ட பொக்கிஷம்!
ஓரிரு மாதங்கள் ஆயிற்று! அறிவழகியின் செல்போனில் ஒரு மெசேஜ் வந்திருந்தது!..... எனக்கு இறக்கை இருந்ததால்.... திரும்பவும் நான் இறங்கிய அமெரிக்கக் குக் கிராமத்தில் தான் இறங்கிய இடத்தில் காத்திருந்தேன்.... நினைத்தபடி எங்கள் விண்கலம் வந்தது! நான் ஏறிச் சென்றுவிட்டேன்!.... உன்னிடம் சொல்லாமல் வந்ததற்கு இங்கு வந்துவிட்டேன்! நீ அயர்ந்து தூங்கிக் கொணடிருந்தாய்!.... எழுப்ப மனமில்லை!...மன்னிக்கவும்.... இப்போது எங்கள் உலகில் பிரதானமாக எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் தமிழ் மொழியே கற்பிக்கப்படுகிறது.... எங்கள் கிரக வாசிகள் திருக்குறள் முற்றோதல் செய்கிறார்கள்!..... இப்போது என் பெயரைக்கூட "பேரன்பு' என்று மாற்றிக்கொண்டிருக்கிறேன்! உன்னுடைய தயிர்சாதமும் ஊறுகாயும் என் நினைவில் இருக்கிறது!.... பின்னோர் நாளில் சந்திப்போம்! மிக்க நன்றியுடன் --- பேரன்பு.
பேரன்பினால் எப்படி இந்த செய்தியை தன் கைபேசியில் அனுப்ப முடிந்தது?.... அது சரி. பேரன்பினால் முடியாததா!....
அறிவழகி தன்னையும், டிவ்யசித் என்ற பேரன்பையும் ஒரு ஓவியமாக வரைந்திருக்கிறாள். இன்றும் அதை அறிவழகியின் வீட்டில் காணலாம்!


ந. மானஸா
4 -ஆம் வகுப்பு, காங்கேயம், 638701

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.