திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""ஊரடங்கு முடிஞ்சதால, இன்று முதல் ஆட்டோ, டாக்சி ஓடுமாம்!''""ஏன், முதல் ஆட்டோ தான் ஓடுமா? இரண்டாவது ஆட்டோ, டாக்சி எல்லாம் ஓடாதா!''

News image
Updated On :18 ஜூலை 2020, 12:30 am

""ஊரடங்கு முடிஞ்சதால, இன்று முதல் ஆட்டோ, டாக்சி ஓடுமாம்!''
""ஏன், முதல் ஆட்டோ தான் ஓடுமா? இரண்டாவது ஆட்டோ, டாக்சி எல்லாம் ஓடாதா!''

ஆர் . அஸ்வின் குமார், 
போதனூர் - 641023

""அப்பா!.... உங்க ஆபீஸ் ஃபிரெண்ட் காபி மட்டும்தான் குடிச்சார்!... அவரை சாப்பிடச் சொல்லுங்க!''
""அவருக்கு "அவரை' பிடிக்காது!''

நா.வினோத் குமார்,
ராணிப்பேட்டை - 632510.

""பைரவா!....''
""என்னம்மா....ஏன் கூப்பிட்டே ?..''
""வீட்டுக்கு வர்றப்ப "பை  ரவா"....உப்புமா செய்துக்கலாம் !''

எம்.ஏ.நிவேதா
அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி-620015.

""1985 - இல் நம் நாட்டுப் பிரதமர் பேரு என்ன?''
""அப்போதும் நம் நாட்டுப் பிரதமரின் பெயர் நரேந்திர மோடிதான் சார்!''

உ.அலிமா பீவி, 
கடையநல்லூர் - 627751.

""நானும் என் தம்பியும் ரெட்டையர்களாகப் பிறந்தது நல்லதாப் போச்சு!''
""என்ன விஷயம்?''
""ஆன் லைன் வகுப்பிலே மாறி, மாறி உட்கார்ந்து விளையாடப் போயிடுவோம்!''

ஆர். யோகமித்ரா, 
சென்னை - 600073.

""அறம் செய விரும்பு,.... ஆறுவது?....''
""உங்களோட மதிய சாப்பாடு சார்!''

கே.இந்து குமரப்பன், 
விழுப்புரம் -605602
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.