எங்க ஸ்கூல்ல கேரளாவுக்கு டூர் கூட்டிட்டு போனாங்க. கேரளாவில் இருக்கும் ஒரு மிருகக்காட்சி சாலைக்கு எங்களைஅழைச்சிட்டு போனாங்க. அங்கேதான் ஒட்டகச்சிவிங்கியை முதல் தடவையா பார்த்தேன். பார்க்கவே பிரமிப்பா இருந்துச்சு! பார்த்துக்கிட்டே இருந்தேன். அந்த ஒட்டகச் சிவிங்கி பக்கத்திலிருந்த மரத்திலிருந்து இலைகளை பறிச்சு சாப்பிட்டுக்கிட்டிருந்தது! ஹப்பா! எவ்வளவு நீளமான கழுத்து!
டூர் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். அப்பா, அம்மா கிட்ட ஒட்டகச்சிவிங்கி பார்த்து பிரமிச்சு போயிட்டேன்னு சொன்னேன். ""அதோட கழுத்து ஏன் இவ்வளவு உயரமா இருக்கு?.... நம்ம யாருக்கும் அது மாதிரி கழுத்து இல்லயே?'' ன்னு அப்பாகிட்டே கேட்டேன். அதுக்கு அப்பா சிரிச்சுட்டே, ?""நீ பார்த்த ஒட்டகச் சிவிங்கியைப் படமா வரைஞ்சு தா'' ன்னு சொன்னாரு'.
நான் பார்த்த ஒட்டகச்சிவிங்கியையும், அந்த உயரமான மரத்தையும் படமா வரைஞ்சேன். மறுநாள் எங்க கிளாஸ் மிஸ் கிட்ட காட்டணும்னு ஆர்வமா இருந்தேன். காலையில டேபிள்ல இருந்த டிராயிங்கை பார்த்தா காணோம். அம்மா கிட்ட கேட்டேன். பார்க்கலன்னு சொன்னாங்க.
வீட்டுல எங்க தேடியும் கிடைக்கல. வரைஞ்ச படத்தை யாரு எடுத்து இருப்பாங்க? தெரியலையே!... கவலையா இருந்தது!
ஸ்கூல்ல போயி சோகமா உட்கார்ந்து இருந்தேன். என்னைப் பார்த்த மிஸ், ""ஏன் பூஜா சோகமா இருக்கே?'' ன்னு கேட்டாங்க. "" வீட்டுல படம் வரைஞ்சேன்.... அத காணல!..''ன்னு சொன்னேன். ""சரி, அதுக்கு ஏன் சோகமா இருக்கே. நீ வரைஞ்ச படம் எங்கேயும் போகாது. உனக்கு திரும்ப கிடைக்கும் கவலைப்படாதே!'' ன்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொன்னேன்.
ஒரு வாரம் ஆச்சு. எங்கள் ஸ்கூல்ல நோட்டீஸ் போர்டுல அச்சு அசலா நான் வரைஞ்ச மாதிரியே ஒரு ஒட்டகச்சிவிங்கி படம் ஒட்டியிருந்தாங்க. ஆங்!...... நான் வரைஞ்சதேதான்! இது எப்படி இங்கே வந்தது!.... எனக்கு ஆச்சரியமாப் போச்சு! ஈவினிங் எங்க ஸ்கூல் பிரின்சிபல் என்னை கிளாஸ் மிஸ்கிட்ட சொல்லி . என்னை அழைச்சிட்டு வர சொன்னாங்க. எனக்கு பிரின்சிபல் மேடம் கூப்பிட்டதும் ஒரே பயம்.
""பயப்படாத தைரியமா வா''ன்னு மிஸ் கூட்டிட்டு போனாங்க. போனதும், ""உன்னோட டிராயிங் ரொம்ப சூப்பரா இருந்துச்சு பூஜா!.... வெரிகுட்!.... இந்தா!'' ன்னு சொல்லி ஒரு கிஃப்ட் பாக்ûஸக் கொடுத்தாங்க. எனக்கு ஒரே சந்தோஷம்.
எனக்கு ஒண்ணும் புரியல! நம்ம வரைஞ்ச டிராயிங் எப்படி பிரின்சிபல் கைக்கு போச்சுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். உடனே மிஸ் சொன்னாங்க. ""உங்கப்பா இன்னிக்கு ஸ்கூலுக்கு வந்திருந்தாரு. நீ வரைஞ்ச படத்தைக் காலையில ஸ்கூலுக்குக் கொண்டு வந்து கொடுத்தாரு. நான் பிரின்சிபல் மேடம் கிட்ட கொண்டு போய் காட்டினேன். ""நல்லா இருக்கு!... யாரு வரைஞ்சா?'' ன்னு கேட்டாங்க.
நான் உன்னோட பெயர சொன்னேன். ""அவளை அழைச்சிட்டு வாங்க... நான் கிஃப்ட் கொடுக்கணும்!'' னு சொன்னாங்க, எல்லா ஸ்டூடன்ஸþம் பார்க்கற மாதிரி நோட்டீஸ் போர்டுல போடச் சொன்னாங்க.
நான் வரைஞ்ச படம் அப்பாவுக்கு எப்படி கிடைச்சது? வீட்டுக்கு போனதும் அம்மாக் கிட்ட கேட்டேன்.
""நீ வரைஞ்ச படம் பீரோவுக்கு அடியில காத்துல பறந்து போய் கிடந்துச்சு. உனக்கு சப்ரைஸா இருக்கணும்னுதான் நாங்க இந்த ஐடியா செஞ்சோம்!...'' அப்படீன்னு அம்மா சொல்லி சிரிச்சாங்க.
ஒட்டகச்சிவிங்கி போல் என்னுடைய கழுத்தும் நீண்டது போல் ஆனது.
ச.ஸ்ரீஹம்சினி,
4 - ஆம் வகுப்பு, சேலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


