திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""ஏம்ப்பா, சர்வர்!.....எவ்வளவு நேரமா கேட்டுக்கிட்டிருக்கேன்!...... பொங்கல் எப்பொ வரும்?""""தை மாசம் வரும் சார்!''

News image
Updated On :27 ஜூன் 2020, 4:30 am


""ஏம்ப்பா, சர்வர்!.....எவ்வளவு நேரமா கேட்டுக்கிட்டிருக்கேன்!...... பொங்கல் எப்பொ வரும்?""
""தை மாசம் வரும் சார்!''

நா.விநோத் குமார், 
பாராஞ்சி.

"ஏண்டா எதுக்குடா இத்தனை நூல்கண்டு?''
""நூல்களையெல்லாம் சேர்த்து வைக்கணும்னு வாத்தியார் சொன்னாரில்லே!''

எ.எஸ்.கண்ணன், 
அந்தியூர் - 638501


""எதுக்குடா சோஷியல் புக்கை தள்ளி வெச்சிருக்கே?''
""சோஷியல் டிஸ்டன்ûஸக் கடைப்பிடிக்கிறேன்!''

மு.சடகோபன்,
அம்பாசமுத்திரம் வழி, 627414.


""பத்தாங்கிளாஸிலே எல்லோரும் பாஸ்தான்னு சொல்லிட்டாங்கடா!''
""இத எதிர்பார்த்துத்தான் நான் சுத்தமா படிக்கவேயில்லடா!''

ஆர்.மகாதேவன், 
திருநெல்வேலி டவுன் - 627006.

""இந்தியக் குதிரைக்கும், அமெரிக்கக் குதிரைக்கும் ஓட்டப் பந்தயம் வெச்சா 
எந்தக் குதிரை முன்னாலே ஓடி வரும்?''
""தெரியலையே,.... நீயே சொல்லு!''
""எல்லாக் குதிரைகளும் முன்னாலேதான் ஓடிவரும்...!''

ஆர்.சுப்பு, 
திருத்தங்கல்.

""எங்க தாத்தாவோட சதாபிஷேகம் ரொம்ப சிம்பிளா நடந்து முடிஞ்சுது!''
""அப்ப அதை "சாதா' பிஷேகம்னு சொல்லு!''

கோ.வினோத்,
திருநெல்வேலி - 627011

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.