வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒளிர்ந்த பட்டாம்பூச்சி!

என் வீடு மலைச்சரிவில் இருந்தது. இரவு நேரம்.  சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல் என்  ஷாலுவை எடுத்துக்கொண்டேன். ஷாலு என்றால் யாரோன்னு நெளைச்சுக்காதீங்க...

News image
Updated On :9 மே 2020, 1:24 pm


என் வீடு மலைச்சரிவில் இருந்தது. இரவு நேரம். சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல் என் ஷாலுவை எடுத்துக்கொண்டேன். ஷாலு என்றால் யாரோன்னு நெளைச்சுக்காதீங்க... அதுதான் என் கரடி பொம்மை!! ஷாலு என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். பிரவுன் கலர் ஸ்வீட் ஷாலு! படுக்கையறையின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டு என் பொம்மையோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். அதற்கு நிலாவைக் காண்பித்தேன். அந்த பொம்மை மகிழ்ச்சியாக என்னைப் பார்த்துச் சிரித்தது. மலை அடிவார கிராமத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளையும் ஷாலுவுக்குக் காண்பித்தேன். அது ஆச்சரியமாக எல்லாவற்றையும் பார்த்தது. எனக்கு தெரிந்த நிலாப்பாட்டைப் பாடினேன். ஷாலுவைத் தூங்கவைக்க வேண்டுமில்லையா?.... அதற்காகத்தான்.
""பத்மாக்குட்டி.... இன்னும் தூங்கப்போகலையா நீ?'' என்று அம்மா கேட்டாள்.
""இரும்மா.... ஷாலு தூங்கினப்புறமா நான் தூங்கறேன்!'' என்று கூறினேன். ஷாலு தூங்கிவிட்டது. எனக்கும் அசதியாகத்தான் இருந்தது.
அப்போதுதான் அது நடந்தது! கை தவறி ஜன்னல் கம்பிகளுக்கு இடையிருந்து என் ஷாலு கீழே விழுந்துவிட்டது. படுக்கையறையை ஒட்டி மலைச்சரிவு இருந்தது. பாவம் ஷாலு!.... அடிபட்டிருக்குமோ?.... எனக்கு அழுகையாக வந்தது. அம்மா வந்து , "" என்ன ஆச்சு?'' ன்னு கேட்டாங்க.
நான் கண்ணீருடன் ஜன்னலைக் காண்பித்து ஷாலு விழுந்துவிட்டதை அம்மாகிட்டே சொன்னேன்.
""பத்மாக்குட்டி!....அழக்கூடாது!..... போனாப் போகுது!....அப்பாகிட்டே சொல்லி வேறே வாங்கிக்கலாம்!... இப்போ தூங்குடா செல்லம்!'' அப்படீன்னாங்க.
எனக்கு மனசே சரியில்லை. ஷாலு இருட்டில் என்ன செய்கிறதோ?.... என்னைத் தேடுகிறதோ?....அழுமோ? என்றெல்லாம் எனக்குத் தோன்றியது.
நான் நைசாக படுக்கையறையை விட்டு வெளியே வந்தேன். கரண்ட் கட் ஆகியிருந்தது. இந்த இருட்டில் நான் ஷாலுவை எப்படித் தேடுவேன்?.....
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது! ஒரு பட்டாம் பூச்சி! ரொம்ப அழகா இருந்தது. முதலில் சிறியதாகப் பறந்து வந்த அது மிகப் பெரிதாக ஆகிவிட்டது. மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளும் பார்டருமாக அது இருந்தது. என் கிட்டே வந்த அது
""வா!.... என் மேலே உட்கார்ந்துக்கோ!....'' என்றது அந்தப் பட்டாம்பூச்சி.
""இல்லை நான் இப்போ என் கரடிக்குட்டி ஷாலுவைத் தேடியாகணும்.... இருட்டா வேறே இருக்கு.... எப்படித் தேடறதுன்னே தெரியலே... பயமா இருக்கு...'' என்றேன் நான்.
""கவலைப் படாதே என் மேலே ஏறி உட்கார்ந்துக்கோ!.... நாம ரெண்டு பேரும் சரிவில் பறந்து போகலாம்.... என் சிறகை விரித்துப் படபடக்கும்போது ஒளி கூடிடும். பிரகாசமா ஆயிடும்! உன் பட்டாம்பூச்சியை சுலபமாக் கண்டுபிடிச்சுடலாம்!.... வா! '' என்றது.
""நான் ஜம்மென்று அந்தப் பட்டாம்பூச்சியின் மீது ஏறி அமர்ந்து கொண்டேன்.
ஆச்சரியம்!...இறகுகள் படபடக்க பிரகாசம் கூடிக்கொண்டே இருந்தது. மலைச்சரிவில் இருந்த சிவப்பும் ஊதாவும் கலந்த மலர்கள் கூடப் பிரகாசித்தன. மலைச்சரிவே ஒளிமயமாக இருந்தது. எனக்கு அந்தப் பிரயாணமே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வானத்தில் நிலவும் நட்சத்திரங்களும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
பட்டாம்பூச்சி என்னை மெல்ல சரிவுக்குக் கொண்டு சென்றது. அங்கே!...... என் பிரியமான ஷாலு! பட்டாம்பூச்சி என்னை இறங்கச் சொன்னது. நான் இறங்கியவுடன் ஷாலுவிடம் ஓடினேன். அதை வாரிக் கையில் எடுத்துக் கொண்டு கொஞ்சினேன். ஷாலுவின் கண்ணைத் துடைத்துவிட்டேன். பட்டாம்பூச்சி ஒவ்வொரு மலர்களாக அமர்ந்தது. ஒரு பூ அதன் வாயில் ஒட்டிக்கொண்டது. மற்றொரு பூவில் அமர்ந்தது. அதுவும் வாயில் ஒட்டிக்கொண்டிருந்தது. இப்படியே ஒரு மாலைபோல சிவப்பு ஒளி மலர்கள் ஒரு மாலைபோல ஆகியது அதை ஷாலுவுக்கு சார்த்தியது பட்டாம்பூச்சி.
மெல்லிய ஒளியுடன் அந்தப் பட்டாம்பூச்சி வானத்தில் மறைந்துகொண்டிருந்தது.
இப்போ எப்படி மலையின் மீது ஏறி வீட்டுக்குப் போவது?....
""ஐயய்யோ!'' என்று கத்தியதும் என்னை அம்மா எழுப்பி, ""என்ன பத்மாக்குட்டி!.... எதாவது கனவா?'' என்று கேட்டாள்.
""ஆமாம்மா!'' என்று கூறிக்கொண்டிருந்தபோது என் ஷாலு என் பக்கத்தில் அழகாகப் படுத்திருந்தது.

படம் வரைந்தவர் - ஏ . அக்ஷயாஸ்ரீ, 
4 ஆவது கிரேடு, யு,எஸ்.ஏ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.