சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழை!

எட்டுத்திக்கும் இடி முழங்க எங்குமே மழை!சுட்டும் மின்னல் ஒளியுடனே 

News image
Updated On :21 நவம்பர் 2020, 12:30 am

DIN

எட்டுத்திக்கும் இடி முழங்க 
எங்குமே மழை!
சுட்டும் மின்னல் ஒளியுடனே 
சீறும் ஓர் இழை!

பட்டணத்து வீதிகளில் 
படகு ஊர்வலம்!
பட்டி, தொட்டி யெங்கிலுமே 
பெரும் நீர்வளம்!

கட்டிடங்கள் நீரிறைக்க 
வீதியிலே வெள்ளம்!
கட்டும் துணி நனைந்துலர
காத்திருக்க வேணும்!

சுட்டிக்கெல்லாம் ஓடியாட
சில நாள் உவகை!
கிட்டும் மீன் வலை விரிக்க 
கூட்டுவார் படை!

வட்ட நிலா எழிலைக் காண 
வானிலே தடை!
எட்டும் தூரம் சென்று வர 
ஏற்றதே குடை!
குட்டை மீன்கள் வெள்ளம் நோக்கி 
சீறிடும் பாய்ந்து!
செடி, கொடிகள் தாவரங்கள் 
காற்றினில் ஆடும்!

சில மரங்கள் வீதியிலே
விழும் தடையாக!
சீர் செய்வோம் அவை நீக்கி 
பாதைகளை நாம்!

சிக்கியவர் அனைவரையும் 
சேர்ப்போம் கரையில்!
எங்கேனும் யாரேனும் 
அவதிப் பட்டால்.... 

....எழுந்துடனே புறப்படுவோம் 
அவர் துயர் போக்க!
திட்டமிட்டு நாம் இணைந்து 
பேரிடர் காப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.