சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடி

""மனக் கணக்கு போட ஏன் இவ்வளவு நேரம் யோசிக்கிறே?''""இது மனக் கணக்கா சார்? நான் மணிக்கணக்குன்னு நினைச்சிட்டேன்.''

News image
Updated On :28 நவம்பர் 2020, 11:23 am

DIN


""மனக் கணக்கு போட ஏன் இவ்வளவு நேரம் யோசிக்கிறே?''
""இது மனக் கணக்கா சார்? நான் மணிக்கணக்குன்னு நினைச்சிட்டேன்.''

 - ஏ. நாகராஜன்,
 பம்மல்.

""உங்கிட்டே என்சைக்ளோபீடியா இருக்கா?''
""உன் சைக்ளோபீடியால்லாம் இல்லியே...,என்சைக்ளோபீடியாதான் இருக்கு!''

கோ.சித்ரா,
கிருஷ்ணாபுரம்.

""நம்ம வாத்தியார் ஸ்கூலை விட்டு விலகியது ‘பேரி'ழப்புடா!''
""அப்போ,  அந்த பேரை வேற யாருக்காவது வைச்சிருவோம்!'' 

இர.கிருத்திக்குமார்,
நெய்வேலி.


 ""எனக்கு சரித்திரப் பாடமே பிடிக்கலே சார்!''
""ஏன்?''
""அதிலே எதிர்காலமே இல்லையே சார்!''


உ/ர்,
கடையநல்லூர்.

""மன்னர்களுக்குப் பிடித்த கிழங்கு எது?''
""சேனைக் கிழங்கு!''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.

""நான் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலே  போகாம நிதானமாத்தான் கார் ஓட்டுவேன்!''
""ஏன்?.... மணி கோச்சுப்பாரா?''

சி.ஆர்.ஹரிஹரன்,
அலுவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.